அஸ்ஸாமில் பாஜக கூட்டணிக்கு அதிக இடம்.. ஆனால் கடும் போட்டி நிச்சயம்.. டைம்ஸ் நவ் சர்வே
குவஹாத்தி: முக்கியமான வடகிழக்கு மாநிலமான அசாமில் தேர்தல் பிரச்சாரம் தீவிரத்தை எட்டியுள்ளது மற்றும் டைம்ஸ் நவ் சிவோட்டர் கருத்துக் கணிப்பு நடத்தி அங்கு யார் வெற்றி பெறுவார்கள் என்று தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பின்படி ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்றாலும், காங்கிரஸ் கூட்டணி கடும் சவாலை தருமாம்.
முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தான் நாடு சுதந்திரத்திற்குப் பிறகு அசாமில் நடந்த முதல் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி ஆகும்.
மீண்டும் ஆட்சியைபிடிக்க வேண்டும் என்று பாஜக கடுமையாக வேலை செய்து வருகிறது. ஆனால் இந்த முறை பாஜகவிற்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கடும் சவாலை தரும் என தெரிகிறது. ஏனெனில் பல கட்சிகள் பாஜகவிற்கு எதிரா காங்கிரஸ் அணியில் இணைந்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாக்லிக் கண மார்ச்சா, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோ லேண்ட் ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டு மெகா கூட்டணியை அமைத்து உள்ளது காங்கிரஸ். பாஜக, அஸ்ஸாம் கனபர்ஷித் மற்றும் சிறிய கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது

அஸ்ஸாம் கேள்விகள்
டைம்ஸ் நவ் சிவோட்டர் கருத்துக் கணிப்பு வழக்கமான தேர்தல் கேள்விகளை தாண்டி , அசாம் குடிமக்களிடம் முக்கிய பிரச்சினைகளை கேட்டிருக்கிறதாம், குறிப்பாக குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் மாநிலத்தில் வாக்களிக்கும் முறையை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி அவர்களின் கருத்துக்கள் என்ன என்று கேட்டிருக்கிறது. ஒட்டுமொத்த முடிவுகள் அசாமில் உள்ள மக்களின் தேவைகள் மற்றும் எண்ணங்களையும் , மிக முக்கியமான பிரச்சினைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கூறியுள்ளது டைம்ஸ் நவ் தொலைக்காட்சி.

காங்கிரஸ் 60 இடங்கள் வரை
அந்த தொலைக்காட்சி வெளியிட்ட கணிப்பிபின் படி. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) மீண்டும் 69 இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாம். அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) 56 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளதாம். எனினும் என்டிஏவுக்கு 65-73, யுபிஏவுக்கு 52-60 மற்றும் மற்ற கட்சிகள் 0-4 இடங்கள் பெறக்கூடும் என்கிறது கணிப்பு.

முஸ்லீம் வாக்குக
காங்கிரஸ் கூட்டணிக்கு முஸ்லீம் வாக்குகள் அதிகமாக இந்த முறை கிடைக்குமா என்று டைம்ஸ் நவ் கேட்ட கேள்விக்கு பலர், கலவையான பதில் அளித்துள்ளனர். 39.7 சதவீதம் பேர் ஆம் என்று கூறினாலும், 41.6 சதவீதம் பேர் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், பதிலளித்தவர்களில் 18.7 சதவீதம் பேர் இது குறித்து உறுதியாக தெரியவில்லை என்கிறார்கள்.

எங்கு எவ்வளவு
அஸ்ஸாமிற்கு வடக்கு அஸ்ஸாம் பகுதியில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 4 இடங்களிலும், காங்கிரசின் தேசிய முற்போக்கு கூட்டணி 2 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாம். கீழ் அஸ்ஸாம் பகுதியில் 21 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும்,. 10 இடங்களில் பாஜக கூட்டணியும் வெல்ல வாய்ப்பு உள்ளதாம்.

பார்கர் பள்ளத்தாக்கு
அஸ்ஸாமின் போடலாந்து பகுதியில் 10 ,இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் , 8 இடங்களில் பாஜக கூட்டணியும் வெல்லக்கூடுமாம். அஸ்ஸாம் மலைப்பகுதியில் 5 இடங்களிலும் பாஜகவே வெல்லுமாம். அஸ்ஸாமின் பார்கர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாம்.
-
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
Aadhar: இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை கிடையாது! சொன்னது போல் செக் வைத்த அமித்ஷா! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications