மே.வ.அமைச்சர்கள் கைது:திரிணாமுல் போராட்டம்- கல்வீச்சு- சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தல்
கொல்கத்தா: நாரதா லஞ்ச வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ. உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சி.பி.ஐ அலுவலகம் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கல்வீசிப் போராட்டம் நடத்தினர். அத்துடன் மாநில அரசின் அனுமதி பெறாமல் அமைச்சர்களை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
Recommended Video
போலி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக நாரதா செய்தி இணையதளம் வீடியோ, படங்களை வெளியிட்டது. இதனடிப்படையில் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

மமதா பானர்ஜி சவால்
இந்த விசாரணையைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் இன்று காலை சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த கைதுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்களை கைது செய்ததைப் போல எங்கே என்னையும் கைது செய்யுங்கள் என சிபிஐ அதிகாரிகளிடம் மமதா வாக்குவாதம் செய்தார்.

சிபிஐ அலுவலகம் மீது கல்வீச்சு
மேலும் சிபிஐ அலுவலகம் முன்பாக திரண்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிபிஐக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அப்போது சிபிஐ அலுவலகம் மீது கல்வீசியும் சிலர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

கைது செய்ய வலியுறுத்தல்
இதனிடையே மாநில அரசு, சபாநாயகர் அனுமதி பெறாமல் அமைச்சர்களை கைது செய்தது சட்ட விரோதம்; ஆகையால் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநில காவல்துறை தலைவரிடம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மே.வங்க ஆளுநர் கருத்து
இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் தமது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் மமதா பானர்ஜி அரசியல் சாசன மரபுகளையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications