For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி, ஸ்டாலின் தலா ரூ. 25 லட்சம், ஜெ., ரூ. 24.55 லட்சம்.. சட்டசபை தேர்தல் செலவு கணக்கு வெளியீடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா ரூ. 24.55 லட்சமும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதி ரூ. 25 லட்சமும் செலவு செய்துள்ளனர்.

2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

TN leaders spend lesser than EC set limit on 2016 Assembly polls

போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து இந்த கணக்கு விவரங்களை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

•சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் செலவுத் தொகை ரூ.24.55 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

•திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலா ரூ.25 லட்சம் செலவு செய்துள்ளனர்.

•உளுந்தூர் பேட்டையில் போட்டியிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரூ.16.70 லட்சம் செலவு செய்துள்ளார்.

•காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் ரூ.15.90 லட்சம் செலவு செய்துள்ளார்.

•பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் ரூ.19 லட்சம் என தேர்தலுக்கு செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

• தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த தொகையை விட குறைவாகவே அரசியல் கட்சியினர் செலவு செய்துள்ளதாக கணக்கு கொடுத்துள்ளனர்.

•இதில் திமுக தலைவர் கருணாநிதியும் ஸ்டாலினும்தான் 25 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.

• விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் குறைந்த அளவாக ரூ. 15.90 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

English summary
ADMK chief Jayalalithaa, DMK president M Karunanidhi, his son M K Stalin, and DMDK chief Vijayakanth spent far less than the limit set by the Election Commission for poll-related expenses during the 2016 assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X