For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தக்காளி விலை இப்படி ஏறுதே... மழை நின்னாத்தான் விலை குறையுமாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயாக உள்ள நிலையில் இந்த விலை உயர்வு தற்காலிகமானதுதான் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மழை குறைந்த உடன் விலை குறைந்து விடும் என்று மத்திய மத்திய அமைச்சரவைச் செயலாளர் சின்ஹா தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடிகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி, வெங்காயம் மட்டுமல்லாது அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

டெல்லியில் கூடி ஆலோசனை

டெல்லியில் கூடி ஆலோசனை

காய்கறி, பழங்கள் மற்றும் உணவு தானியங்களின் விலை குறைத்து ஆராய உயரதிகாரிகளின் கூட்டம் டெல்லியில் நடந்தது. மத்திய விவசாயம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அதிகாரிகள் அதில் பங்கேற்றனர்.

தக்காளி - வெங்காயம்

தக்காளி - வெங்காயம்

தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலையைக் கட்டுப்படுத்த இப்போதைக்கு வேறு நடவடிக்கைகள் தேவைப்படவில்லை என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எல்லா மாநிலங்களிலும் உயர்வு

எல்லா மாநிலங்களிலும் உயர்வு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரவைச் செயலாளர் சின்ஹா, தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல மாநிலங்களில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.

தற்காலிகம்தானாம்

தற்காலிகம்தானாம்

தக்காளி விலை உயர்வு தற்காலிகமானதே என்ற அவர், மழை நின்றதும் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்து விலை குறையத் தொடங்கிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

கிலோ ரூ. 100 வரை

கிலோ ரூ. 100 வரை

ஒரு கிலோ 70 முதல் 100 வரை உயர்ந்துள்ள தக்காளியின் விலை, வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தக்காளி அதிகம் உற்பத்தி செய்யப்படும் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பெய்த கனமழையே விலை உயர்வுக்குக் காரணம் என சின்ஹா தெரிவித்தார்.

மழை நின்றதும்

மழை நின்றதும்

மழை நின்றதும் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்து விலை குறையத் தொடங்கிவிடும் என்றும் கூறினார். தொடர் மழையால் மற்ற மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து தடைபட்டதால் தென் மாநிலங்களில் அதன் விலை உயர்ந்திருப்பதாகவும் சின்ஹா கூறினார்.

மழை எப்போ நிக்கும்? காய்கறி விலை எப்போ குறையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் திருவாளர் பொதுஜனங்கள்.

English summary
As the rain has not come down yet, the price of Tamato and other veggies are on rise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X