For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடுமையான சட்டங்களால் மட்டும் பெண்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து காக்க முடியாது: தத்து

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: கடுமையான சட்டங்களால் மட்டும் பெண்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் பெண் வழக்கறிஞர்களின் 35-வது சர்வதேச மாநாட்டை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

Tough laws alone can't protect women against sexual violence: CJI HL Dattu

கடுமையான சட்டங்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை குறைக்கும் என்று நம்புவது ஆழமான புண்ணின் மீது பேண்ட் எய்ட் போடுவது போன்று. கடுமையான சட்டங்களால் தீர்வு கிடைக்காது. கடுமையான சட்டங்களால் மட்டும் பெண்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க முடியாது. பாலின உரிமைகள் பற்றி இளம் சமூகத்தினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

கழிப்பறைகள், ஒழுங்கான தெருவிளக்குகள் போன்ற அடிப்படை தேவைகளில் முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற தேவைகள் குறித்து நாம் சிந்திக்கும் வரை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க முடியாது என்று நான் அஞ்சுகிறேன். பெண்களை அடைத்து வைப்பது அவர்களை பாதுகாப்பது இல்லை. சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் வழங்ப்படும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிருப்தி அளிக்கிறது என்றார்.

English summary
Tougher laws alone cannot protect women against sexual violence and a holistic and systematic approach ha to be adopted to address the issue, Chief Justice of India HL Dattu on Saturday said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X