For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்பா.. சொல்லியடிக்கும் மம்தா.. 164 இடங்களை பெற்று அதிரி, புதிரி வெற்றி.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: .மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 152 முதல் 162 வரையிலான இடங்களை பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று நியூஸ் எக்ஸ்: நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.

மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடது சாரி கூட்டணியும் களத்தில் மல்லுக்கட்டுகின்றன.

 மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் - ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் - ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல்

தேர்தல் கருத்து கணிப்பு

தேர்தல் கருத்து கணிப்பு

ஏற்கனவே தேர்தல் முந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரு சில கருத்து கணிப்புகள் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தன. வேறு சில கருத்து கணிப்புகள் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவும் என்று தெரிவித்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

பாஜக-திரிணாமுல் இடையே போட்டி

பாஜக-திரிணாமுல் இடையே போட்டி

இந்த நிலையில்நியூஸ் எக்ஸ் இணைந்து வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அதிரி, புதிரி வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. அதாவது திரிணாமுல் காங்கிரஸ் 152 முதல் 162 வரையிலான இடங்களை பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. பாஜக 115 முதல் 125 இடங்களை பெற்று தோல்வியை தழுவும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. காங், இடதுசாரிகள்- 16 முதல் 26 இடங்களையே பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மம்தாவுக்கு நெருக்கடி

மம்தாவுக்கு நெருக்கடி

இதன் மூலம் மம்தா பானர்ஜிக்கு பிரசாந்த் கிஷோர் வகுத்த வியூகம் அமோக வெற்றி பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி 211 இடங்களை வென்றது. அந்த வகையில் பார்த்தால் இப்போது சுமார் 49 இடங்களை அந்த கட்சி இழக்க போகிறது.

பாஜக பரவாயில்லை

பாஜக பரவாயில்லை

கடந்த தேர்தலில் 3 இடங்களை மட்டுமே பெற்ற பாஜக 119 இடங்களை அதிகமாக பெறுகிறது. கடந்த தேர்தலை விட அதிகமாக பெற்றாலும் பாஜக வெற்றி பெற முடியாது என்பதையே கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இது இருந்த போதிலும் வருகிற 2- ம் தேதி யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரிந்து விடும்.

English summary
In West Bengal, the Trinamool Congress will win a hat-trick of 152 to 162 seats, according to a NewsX poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X