திரிபுராவில் பாஜக ஆட்சி- முதல்வராக பிப்லாப் தேப் பதவியேற்றார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகர்தலா: திரிபுரா முதல்வராக பாஜக மாநில தலைவர் பிப்லாப் குமார் தேப் இன்று பதவியேற்றார். திரிபுராவில் பாஜக முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக- ஐபிஎப்டி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 60 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டசபையில் பாஜக 35 இடங்களையும் ஐபிஎப்டி 8 இடங்களையும் கைப்பற்றியது.

Tripura: Biplab Deb takes oath as BJP’s first CM

இதையடுத்து திரிபுராவில் 25 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சி முடிவுக்கு வந்தது. பெரும்பான்மை பலத்துடன் வென்ற பாஜகவின் பிப்லாப் குமார் தேப் இன்று திரிபுரா முதல்வராக பதவியேற்றார்.

அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் ததகதா ராய் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Biplab Kumar Deb, the 48-year-old Tripura BJP president, took oath as the Chief Minister of the northeastern state, ushering in the first BJP government in the northeastern state.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற