உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது: மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ் துளசி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது என மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ் துளசி தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். தலைமை நீதிபதியை மாற்றுவது குறித்து நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Truth can not be hidden for a long time: Senior lawyer KTS Tulsi

உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் கூறியுள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதித்துறை மீதான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி தெரிவித்துள்ளார். வழக்குகள் பாரபட்சமாக விசாரிக்கப்படுகின்றனவா என சந்தேகம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது என்றும் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி தெரிவித்துள்ளார். சும்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகளின் புகார் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
While commenting on the allegations of the Four senior SC judges, senior advocate KTS Tulsi has said that truth can not be hidden for a long time.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற