பிளானுக்கு பச்சைக்கொடி காட்டினாரா சசிகலா?...புன்னகை மன்னனாக மாறிய டிடிவி தினகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அதிமுக அலுவலத்திற்கு செல்ல தன்னை யாராலும் தடுக்க முடியாது என்று அதிரடியாக சொன்ன டிடிவி தினகரன், பேட்டி முடியும் வரை புன்னகை மன்னனாகவே பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் சிறையில் உள்ள பொதுச்செயலாளர் சசிகலாவை இன்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதிமுகவிற்காக சிறை சென்ற தான் கட்சியில் தொடர்ந்த நீடிப்பதாகக் கூறிய துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் 2 மாதம் பொருத்திருந்து பார்க்கலாம் என்று சசிகலா சொன்னதையடுத்து அமைதியானார்.

இந்நிலையில் அதிமுக அணிகள் இணைப்பிற்கு கொடுத்த அவகாசம் முடிகிறது, தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் வயிற்றில் புளியை கரைத்தார் தினகரன்.

பெங்களூருவில் டிடிவி தினகரன்

பெங்களூருவில் டிடிவி தினகரன்

இந்நிலையில் கெடு முடிவதையொட்டி சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூரு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பரப்பன அக்ரஹாரா சிறைக்கு பிற்பகல் 3 மணியளவில் சென்ற தினகரனுடன் அதிமுக அம்மா அணியின் கர்நாடகா வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த புகழேந்தியும் மேலும் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

சிறையில் கெடுபிடி

சிறையில் கெடுபிடி

சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்த டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டையடுத்து சிறை விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டள்ளதாக தெரிகிறது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து அதன் பின்னரே தினகரன் சசிகலாவை சந்திக்க முடிந்தது.

அலுவலகம் செல்வேன்

அலுவலகம் செல்வேன்

சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பின் போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து தினகரன் விரிவாக கூறவில்லை என்றாலும் கட்சி அலுவலகத்திற்கு தான் செல்ல உள்ளதாகவும், விரைவில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதுக்கெல்லாம் பதில் தர முடியுமா?

அதுக்கெல்லாம் பதில் தர முடியுமா?

எடப்பாடி தரப்பினர் தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியை நடத்த முயல்கிறார்கள். எடப்பாடி தலைமையில், கட்சி, ஆட்சி நடப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக கூறியுள்ளதற்கு பதிலளித்த தினகரன் ஜெயக்குமார் சொல்வதற்கெல்லாம் பதிலளித்தால் சளித்துப் போய்விடும் என்றார்.

TTV Dinakaran Met Sasikala at Parapana Agrahara Prison- Oneindia Tamil
பச்சைக்கொடி

பச்சைக்கொடி

சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த தினகரன் ஜாலியாக பேட்டியளித்ததோடு, யாரையாவது கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, சொல்லுங்கள் என்று செய்தியாளர்களைப் பார்த்து கேட்டார். தொடர்ந்து ஜாலி மூடில் சிரித்துக்கொண்டே புன்னகைமன்னனாக தினகரன் பேட்டியளித்ததை பார்த்தால் அவரின் பிளானுக்கு சசிகலா பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவே தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV. Dinakaran reached Bangalore Parappana jail to meet Sasikala and get advise from her regarding party functionaries.
Please Wait while comments are loading...