சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்.. இந்தியாவை பிளவுபடுத்தும்.. எச்சரிக்கும் ரகுராம் ராஜன்!
ராய்ப்பூர்: இந்தியாவில் சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொழில் வல்லுநர்கள் 5வது மாநாடு நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தாராளமய ஜனநாயகம் ஏன் தேவை என்ற தரப்பில் பேசினார்.

ரகுராம் ராஜன் பேச்சு
அதில், இந்தியாவின் வளர்ச்சியை ஜனநாயகம் தடுத்து நிறுத்துவதாக சில தரப்பினர் பேசுகின்றனர். ஏன், வளர்ச்சிக்காக இந்தியாவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் எதேச்சதிகார சிந்தனை கொண்ட தலைமை தேவை என்று நினைக்கின்றனர். ஆனால் முற்றிலும் தவறானது. இது பொருட்கள் மற்றும் மூலதனத்தை வலியுறுத்தும் தோல்வியடைந்த வளர்ச்சி மாடலை அடிப்படையாகக் கொண்டது.

சிறுபான்மை மக்கள்
இது மக்களுக்கான, புதிய சிந்தனைகளுக்கான மாடல் அல்ல. அதேபோல் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால், செயல்திறன் குறைவாக இருக்கிறது. இதுவே நாம் செல்லும் பாதையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை காட்டுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜனநாயகத்தையும், அதன் அமைப்புகளையும் வலுப்படுத்துவதில் உள்ளது. அதுமட்டுமல்ல, சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குவது இந்தியாவை பிளவுபடுத்தும். அதேபோல், மக்களிடையே மனக்கசப்பை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

இலங்கை சூழல்
தொடர்ந்து இலங்கையின் பொருளாதார சூழலை குறிப்பிட்ட ரகுராம் ராஜன், நாட்டின் அரசியல்வாதிகள் சிறுபான்மையினரை தாக்குகிறார்கள் என்றால், அது வேலைவாய்ப்பை உருவாக்க முடியாமல், பிரச்சனையை திசைதிருப்பும் முயற்சிதான். அதனால் நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை. அதேபோல் சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது, இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதற்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காததே மிகமுக்கியக் காரணம்.

வேலைவாய்ப்பு
அண்மையில் 35 ஆயிரம் இடங்களுக்கான ரயில்வே துறை வேலைக்காக 12.5 லட்சம் பேர் விண்ணத்துள்ளார்கள். இதுவே இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்திற்கான சரியான சான்று. அதேபோல் கல்விக்காக செலவிடாமல், அரசின் பார்வை வேறாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள் ஏராளமானோர் இடைநின்றுள்ளனர். அவர்கள் தான் இந்தியாவின் எதிர்கால மூலதனம் என்று தெரிவித்துள்ளார்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications