நீட்டாக ஷேவ் செய்து.. ஹேர்ஸ்டைலை மாற்றி மும்பையில் சுற்றிய தஷ்வந்த்.. உதவியது யார்!
போலீஸ் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்த ஒரே நாள் இரவில் தாடியை ஷேவ் செய்து விட்டு ஹேர் ஸ்டைலி மாற்றிக்கொண்டு சுற்றியுள்ளான்.
Recommended Video

மும்பை: மும்பையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்த் ஒரே நாள் இரவில் தாடியை ஷேவ் செய்து விட்டு ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டு சுற்றியுள்ளார். தஷ்வந்துக்கு மும்பையில் பணம் கொடுத்து உதவியது யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சிறுமி ஹாசினியை கொன்று விட்டு சிறைக்குப் போய் ஜாமீனில் வந்த தஷ்வந்த் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தாயை கொடூரமாக கொன்று விட்டு தப்பினார்.
குன்றத்தூர் போலீசார் 3 தனிப்படை அமைத்து அவரை தேடினர். தலைமறைவான தஷ்வந்த்தை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.

சிறையில் பழக்கமான புரோக்கர்
தஷ்வந்துக்குப் விபச்சார தொழில் புரோக்கர் ஒருவர் உதவி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த புரோக்கருக்கும் தஷ்வந்துக்கும் சிறையில் இருக்கும்போதுதான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரின் போன் நம்பரை தஷ்வந்திடம் புரோக்கர் கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணிடம் போனில் பேசிய தஷ்வந்த் கோயம்பேடு சென்று அங்கிருந்து பெங்களூருக்கும், அதனைத்தொடர்ந்து மும்பைக்கும் சென்றுள்ளான்.

கூத்தடித்த தஷ்வந்த்
மும்பை செம்பூர் பகுதியில் உள்ள உல்லாச அழகிகள் விடுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை சென்ற போலீசார் தஷ்வந்தை கைது செய்தனர். அவரை இரவோடு இரவாக விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர மும்பை விமான நிலையம் அழைத்து சென்றனர். விமானத்தில் ஏற மறுத்த தஷ்வந்த் திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார். தனிப்படை போலீசாரை அடையாளம் தெரியாமல் வாலிபர் ஒருவரை சிலர் கடத்த முயற்சிப்பதாக மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சென்னைக்கு கொண்டு வர வாரண்ட்
அங்கு வந்த மும்பை போலீசாரிடம் நடந்த விவரத்தை தனிப்படையினர் விளக்கினர். தொடர்ந்து மறுநாள் காலை அவரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சென்னை அழைத்து வர முடிவு செய்தனர். தார்டியா நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு மும்பையில் இருந்து சென்னை கொண்டுவருவதற்கான டிரான்சிட் வாரண்ட் வழங்கப்பட்டது.

ஒரு கைக்கு மட்டுமே விலங்கு
வியாழக்கிழமை மாலை தஷ்வந்த்தை விமான நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டு முடித்ததும் வயிறு வலிப்பதாக கூறி நாடகமாடியுள்ளார் தஷ்வந்த். எனவே ஒரு பக்க கைவிலங்கை போலீசார் கழற்றிவிட்டுள்ளனர்.

தள்ளிவிட்டு தப்பிய தஷ்வந்த்
இதை சாதகமாக்கிய தஷ்வந்த் திடீரென குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் உள்ளிட்ட காவலர்களை தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். இந்த காட்சி ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. போலீசார் போராடியும் அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மும்பை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து குன்றத்தூர் போலீசாருடன் இணைந்து தஷ்வந்தை வலைவீசி தேடினர்.

சுற்றி வளைத்து கைது
இதனிடையே கூடுதல் தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்தனர். மும்பை முழுவதும் சல்லடை போட்டு தேடிய நிலையில் அந்தேரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தஷ்வந்தை இரு மாநில போலீசாரும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அடையாளத்தை மாற்றிய தஷ்வந்த்
போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய தஷ்வந்த் ஒரேநாள் இரவில் தனது ஆடையை மாற்றி புது ஆடைகள் போட்டுக் கொண்டதுடன், தாடியை சேவ் செய்து விட்டு, ஹேர் ஸ்டைலை மாற்றி, தனது அங்க அடையாளங்களை முழுவதுமாக மாற்றியுள்ளார்.

விலங்குடன் சுற்றினான்
ஒரு கை விலங்கு இருந்ததால் அதை உடைத்து எடுக்க முயற்றி செய்திருக்கிறான் ஆனால், முடியவில்லை. இதையடுத்து, உடைந்த கைக்கு கட்டு போடுவதுபோல், அதை மறைத்து சுற்றித் திரிந்துள்ளான்.

போலீஸ் தீவிர விசாரணை
ஒரே நாள் இரவில் கெட்டப் மாற்றும் அளவிற்கு தஷ்வந்துக்கு பணம் எப்படி கிடைத்தது. யாரேனும் அவருக்கு உதவி செய்தார்களா அல்லது அந்த பணத்திற்காக மீண்டும் ஏதேனும் குற்றச் செயல்களில் தஷ்வந்த் ஈடுபட்டானா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications