For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்பயா பலாத்கார வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து இருவர் மனு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் மருத்துவமாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற இரண்டு பேர், பாலியல் வன்கொடுமை சட்டம் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு பஸ்சில் இருந்து கிழே தள்ளிவிடப்பட்டார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனளிக்காமல் பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கெதிரான சட்டமும் உருவானது. கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். வழக்கு விசாரணை முடிவில், ஒரு சிறுவனைத் தவிர மற்ற 4 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தூக்குத்தண்டனை பெற்ற இரண்டு பேர், பாலியல் வன்கொடுமை சட்டம் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

English summary
Two death row convicts move the Supreme Court against the Delhi high court verdict in the December 16 gangrape case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X