Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருது.. வருது.. புதுசா 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள்.. அடுத்த வாரம் வங்கக்கடலில் உருவாகிறது!

வங்கக்கடலில் அடுத்த வாரம் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மீண்டும் மழை... புதுசா 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள் அடுத்த வாரம் உருவாகிறது!- வீடியோ

    டெல்லி: வங்கக்கடலில் அடுத்த வாரம் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் இதுவரை வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவானது. முதலில் இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் சுமார் 10 நாட்கள் மழை பெய்தது.

    குறிப்பாக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்ததால் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மழை ஓய்ந்தது.

    கடலில் பெய்த மழை

    கடலில் பெய்த மழை

    பின்னர் 3 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. ஆனால் இதனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் பெரும்பாலான மழை கடலிலேயே பெய்தது.

    தமிழகத்தில் மழை இல்லை

    தமிழகத்தில் மழை இல்லை

    பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடதிசையில் நகர்ந்து ஒடிஷா நோக்கி சென்று விட்டது. இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைந்து தற்போது மழை முற்றிலும் நின்றுவிட்டது.

    2 புதிய காற்றழுத்த தாழ்வுகள்

    2 புதிய காற்றழுத்த தாழ்வுகள்

    இந்நிலையில் வங்க கடலில் அடுத்த வாரம் புதிதாக 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை சராசரியை விட குறைந்த அளவே பெய்துள்ளதால் கலக்கமடைந்த மக்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியளித்துள்ளது.

    இந்திய வானிலை மையம் தகவல்

    இந்திய வானிலை மையம் தகவல்

    வரும் 21ம் தேதி அந்தமான் அருகேயும், தென்கிழக்கு வங்க கடலில் வரும் 27ம் தேதியும் அடுத்தடுத்து 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தத்தை பொறுத்தவரை பெரும்பாலும் அது தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

    மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

    இருப்பினும் காற்றின் சுழற்சியை பொறுத்து தென் மாவட்டங்களுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+