மும்பையில் மமதா பானர்ஜியுடன் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் சந்தித்து பேசியிருப்பது பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் ஜனவரி மாதம் மேற்கு வங்க தொழில்வர்த்த மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக மும்பையில் முகாமிட்டிருக்கும் மமதா பானர்ஜி, தொழில் அதிபர்களையும் வங்கி அதிகாரிகலையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

Uddhav Thackeray meets Mamata Sparks Debate in Political Circles

மமதா பானர்ஜி நாளைதான் கொல்கத்தா திரும்புகிறார். இந்த நிலையில் மமதா பானர்ஜி தங்கியிருக்கும் தெற்கு மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் சென்றனர்.

மமதாவை நேரில் சந்தித்து உத்தவ் தாக்கரே பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்டவைகளில் பாஜகவை சிவசேனாவும் திரிணாமுல் காங்கிரஸும் கடுமையாகவே விமர்சித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Shiv Sena president Uddhav Thackeray met West Bengal Chief Minister Mamata Banerjee in Mumbai igniting a fresh debate in political circles.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற