For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆதார் எண்ணை வெளியிட கூடாது.. சட்ட நடவடிக்கை பாயும்.. டிராய் இயக்குனருக்கு ஆதார் அமைப்பு குட்டு!

ஆதார் விவரங்களை இணையத்தில் வெளியிட கூடாது என்று மக்களுக்கு ஆதார் அமைப்பு அறிவுரை வழங்கி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆதார் எண்ணை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை பாயும்..வீடியோ

    டெல்லி: ஆதார் விவரங்களை இணையத்தில் வெளியிட கூடாது என்று மக்களுக்கு ஆதார் அமைப்பு அறிவுரை வழங்கி இருக்கிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின் ஆதார் சவாலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன் தன்னுடைய ஆதார் விவரங்களை இணையத்தில் வெளியிட்டார். சமூக வலைத்தளத்தில் அவர் விட்ட சவால், தற்போது அவருக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.

    இந்த நிலையில் ஆதார் அமைப்பு அவருக்கு கொட்டு வைத்துள்ளது. அதேபோல் மக்களுக்கும் சில அறிவுரைகளை வெளியிட்டு இருக்கிறது.

    ஆதார் சவால்

    சில நாட்களுக்கு முன் டிவிட்டரில் தன்னுடைய ஆதார் எண்ணை வெளியிட்டு முடிந்தால் என்னுடைய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுங்கள் என்று சவால் விடுத்தார். இதற்கு எலியாட் என்ற, பிரான்ஸ் ஹேக்கர் அவர் தகவல் அனைத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

    பல தகவல்

    எலியாட், சர்மாவின் ஆதார் எண் மூலம் அவரது போன் நம்பர் , வங்கி கணக்கு, மகளின் புகைப்படம் எல்லாவற்றையும் எலியாட் வெளியிட்டார். அதேபோல் சில ஹேக்கர்கள் அவரின் பெண்ணை மிரட்டினார்கள். சிலர் அவருக்கு போன் வாங்கி கொடுத்தான், வங்கியில் ஒருரூபாய் போட்டுவிட்டு கிண்டல் செய்தனர்.

    வெளியிட கூடாது

    இந்த நிலையில் ஆதார் அமைப்பு வெளியிட்டு இருக்கும் டிவிட்டில், ''பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை பொதுவில் வெளியிட கூடாது. சமூக வலைத்தளங்களிலும், இணையத்திலும் சவால் விடுவதற்காக ஆதார் விவரங்களை வெளியிட கூடாது'' என்று கூறியுள்ளது.

    ரகசியம்

    ஆதார் எண் என்பது மிகவும் தனிப்பட்ட முறையில் முக்கியமான தகவல்களை கொண்டு இருக்கிறது. பாஸ்போர்ட், வங்கி கணக்கு, பேன் அட்டை போல இதுவும் மிகவும் தனிப்பட்ட தகவல்களை கொண்டு இருக்கிறது. இதனால் ஆதார் எண்ணை அங்கீகாரம் பெற்றவர்களிடம் மட்டுமே அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    ஆதார் விதி

    ஆதார் விதி எண் 2006 மற்றும் ஐடி விதியின் படியும், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் தகவல் பாதுகாப்பு மசோதாவின் படியும் தனிப்பட்ட விவரங்கள், எண்களை பொதுவில் வெளியிட கூடாது. இது ஆதாருக்கும் பொருந்தும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

    நடவடிக்கை

    அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களும் இல்லை பிற நபர்களை அந்த செயல்களை செய்ய வைப்பவர்களும் வழக்குகளையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் மக்கள் அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது.

    English summary
    UIDAI advises people not to share Aadhaar numbers after TRAI Chief's Aadhaar Challenge becomes worse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X