For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறக்க முடியாத ஜனவரி 30.. மகாத்மா மறைந்த அந்த சில மணித் துளிகள்!

Google Oneindia Tamil News

மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் மற்றும் பெரிய கொலை வழக்கு விசாரணையாக காந்தியின் கொலை வழக்கு விசாரணை இருந்தது. காந்தி கொலையுண்ட ஜனவரி 30 –ம் தேதிக்கு முன்னரே 5 முறை அவரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு. அந்த 5 முயற்சியின் பின்னணியிலும் நாதுராம் கோட்சே இருந்ததாக கூறுகிறார்கள் காந்தி சுடப்பட்ட உடன் அந்த செய்தி காட்டுத் தீயாக பரவியது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவன் காந்தியை கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று கத்தினான். நல்வாய்ப்பாக அந்த கூட்டத்தில், படேல், நேரு, மவுண்ட்பேட்டன் பிரபு ஆகியோர் நின்றிருந்தனர். அவர்கள் அப்போது உண்மையை கூறியிருக்காவிடில் விளைவுகள் கடும் விபரீதமாகியிருகும்.

Unforgettable memories about Mahatma Gandhi

காந்தி குறித்தும் அவரது கொலை வழக்கு குறித்தும் சில செய்திகள் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக ..

காந்தி 30-01-1948 அன்று மாலை 5.20 மணிக்கு கொல்லப்பட்டார். இந்த செய்தியை அகில இந்திய வானொலி சரியாக 6 மணிக்கு அறிவித்தது

பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் காந்தி கொலை செய்யப்பட்ட உடன் கொலைகாரன் நாதுராம் கோட்சேவை பாய்ந்து சென்று பிடித்த சார்ஜென்ட்டின் பெயர் தேவராஜ் சிங்

சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் பெரிய கொலைவழக்கான காந்தி கொலை வழக்கு 27-05-1948 அன்று துவங்கப்பட்டது

நாதுராம் கோட்சே, டாக்டர் பார்ச்சர் என்பவற்றின் வீட்டில்தான் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி எடுத்துகொண்டான்

காந்தி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததும் அவரை உடனடியாக இர்வின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை லெப்டினன்ட் காலோனா தானேஜா என்பவர் பரிசோதனை செய்தார்.

காந்தியின் உடலில் மூன்று துப்பாக்கி குண்டுகள் இருந்தன, அவரது உடலில் ஐந்து காயங்கள் இருந்தன

காந்தியை கொல்வதற்கு கோட்சே பயன்படுத்திய துப்பாக்கி பெரட்டா பிஸ்டல், அதன் எண் - 606824

இந்த துப்பாக்கியை கோட்சே அப்போது ரூ.300 கொடுத்து வாங்கியுள்ளான்

நாதுராம் கோட்சே, நாராயண தத்தாத்ரேய ஆப்தே , விஷ்ணு ராமகிருஷ்ண கர்கரே, திகம்பர் ராமச்சந்திர பட்கே, கோபால கோட்சே, மதன்லால் பாவா, ஷங்கர் கிஸ்தையா, தத்தாத்ரேய சதாசிவ பராசுரே, விநாயக் தாமோதர் சாவர்க்கர் இவர்கள் அனைவரும் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதில் கோட்சே, ஆப்தே ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனையும், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது இதில் ஒருவர் அப்ரூவராக மாறியதால் விடுதலை செய்யப்பட்டார். மற்ற மூன்று பேரின் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.

காந்தி கொலைவழக்கில் அரசுத் தரப்பில் சி கே தப்தரி என்ற வழக்கறிஞர் ஆஜரானார். ​​​

எதிர்தரப்பில் போப்பட்கர் என்ற மூத்த வழக்கறிஞர் தலைமையில் 15 வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்

வழக்கை ஆத்மசரண் என்ற நீதிபதிதான் விசாரித்து காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே மற்றும் அவனது நண்பன் ஆப்தே ஆகியோருக்கு தூக்கு தண்டனை வித்தித்தார்.

இந்த வழக்கில் நாதுராம் கோட்சேயும் ஒரு அறிக்கை தாக்கல் செய்தான் அந்த அறிக்கை 93 பக்கங்களையும் 3500 சொற்களையும் கொண்டிருந்தது.

இந்த கொலை வழக்கு செங்கோட்டையில் நடைபெற்றது, முதல் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் 10-02-1949

பின்னர் அனைவரும் மேல்முறையீடு செய்தனர் மேல்முறையீடு பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது

மேல்முறையீடு நடைபெற்ற உயர்நீதி மன்றத்திலும் நாதுராம் கோட்சேயின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

கோட்சேயும் அவனது நண்பன் ஆப்தேயும் 15-11-1949 அன்று காலை 8 மணிக்கு தூக்கிலடப்பட்டு கொல்லப்பட்டனர்

பின்னர் இருவரின் உடல்களும் அம்பாலா சிறையில் எரிக்கபட்டது. ​​​

கோட்சேயின் இயற்பெயர் ராமச்சந்திரன் என்பதாகும், நாதுராம் என்றால் மூக்குத்தி என்று பொருள்படும். கோட்சே மூக்குத்தி அணிந்திருந்ததால் அவனுக்கு நாதுராம் என்ற பெயரே நிலைத்து விட்டது.

காந்தியை கொன்றுவிட்டு அவன் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் காந்தி சுயநலமின்றி நாட்டுக்காக பல துன்பங்களை ஏற்றவர் என்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்றும் கூறியுள்ளான்.

காந்தியை, காந்தி என்ற தனி மனித ராணுவத்தை, தனி மனித கொள்கையை கொன்று சாய்த்தது நாதுராம் விநாயக் கோட்சே என்ற தனி மனிதன் அல்ல. அதற்கு பின்னர் பெரும் சதி இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பதே எதார்த்தம்.

English summary
Some unforgettable memories about Mahatma Gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X