உ.பி. குஷிநகர் திருமண விழாவில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்த பெண்கள்.. தண்ணீரில் மூழ்கி 13 பேர் பலி
திருமண விழா ஒன்றின் போது, கிணற்றின் மேல்தளம் உடைந்து விழுந்த விபத்தில் 13 பெண்கள் உள்ளே விழுந்து பலியான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஷிநகர்: உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற பெண்கள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது. விருந்தினர்களாக வந்த பெண்கள் சிலர், வீட்டிற்கு பின்னால் இருந்த கிணற்றின் மூடி மேல் ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
கிணற்றின் மூடியானது இரும்பால் அமைக்கப்பட்டிருந்ததால், அது வலிமையாக இருப்பதாக நினைத்து 20க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், பாரம் தாங்காமல் கிணற்றின் இரும்பு மூடி திடீரென உடைந்து விழுந்தது. இதில், மூடி மீது நின்றுகொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஆழமான கிணற்றுக்குள் விழுந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் வந்தனர். பின்னர்,கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள், சிறுமிகள் என 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்ததில் 13 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் 13 பெண்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications