For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியவருக்கு தங்கப் புதையல்.. அள்ளிக்கொண்டு போன போலீஸ்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தப்பிரதேசத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியவருக்கு குவியல் குவியலாக தங்க நகைகள் புதையலாக கிடைத்துள்ளது. இதை அவர் மறைக்க முயன்ற நிலையில், ஊருக்குள் தகவல் கசிந்து கடைசியில் போலீஸ் நகைகளை அள்ளிக்கொண்டுபோனது. இதன் மதிப்பு ரூ.25லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டோய் நகரில் ஒருவர் புதிதாக வீடு கட்டுவதற்காக நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மண்ணுக்குள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். அந்த புதையலை எடுத்து பார்த்த போது, அதில் 650 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆபரணங்களை இருப்பதை அறிந்தார். ஆனால் இதை யாருக்கும் சொல்லாமல் அப்படியே மறைத்துவைத்துக்கொண்டு வழக்கமாக வேலையில் ஈடுபட்டார்

UP Man Finds gold Worth Rs. 25 Lakh treasure While Digging in hardoi

ஆனால் எப்படியே தங்கம் புதையல் கிடைத்த விஷயம் ஊரெல்லாம் பரவியது. இதை கேள்விப்பட்ட போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். முதலில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று நிலத்தின் உரிமையாளர் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் போலீசார் விடாமல் எச்சரிக்கவே புதையல் கிடைத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் புதையலை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர் அவற்றின் மதிப்பு சுமார் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என போலீசார் கூறினர்.

இந்த புதையல் கைப்பற்றப்பட்டது தொடர்பாக பேசிய ஹார்டோய் காவல் கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்ஷி, 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நகைகள் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது. புதையல் கிடைத்த இடத்தின் உரிமையாளர் அதற்கான உரிய ஆவணங்கள் எதையும் வைத்திருக்கவில்லை. எனவே நாங்கள் புதையலை பறிமுதல் செய்தோம் என்றார்.

English summary
UP Man Finds Jewellery Worth Rs. 25 Lakh While Digging in hardoi. but the police say he can't keep it. . The police seized the jewellery -- 650 gm of gold and 4.53 kg of silver ornaments
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X