என்னடா இது நாட்டுக்கு வந்த சோதனை.. உ.பி.யில் மோடியால் நின்றுபோன திருமணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : பிரதமர் மோடி குறித்து திருமணம் செய்த கொள்ள இருந்த தம்பதி கூறிய இருவேறு கருத்துகளால் உத்தரபிரதேசத்தில் ஒரு திருமணம் தடைபட்டுள்ளது.

இளைஞர்களுக்கு அரசியல் தெரியாது... அரசியல் புரியாது.. அறிவார்ந்த தர்க்கம் தெரியாது என்றெல்லாம் பொது தளத்தில் கருத்து சொல்லப்படுகிறது. ஆனால் இதை பொய்யாக்கும் வகையில் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் சமூக வலைதளங்களின் உதவியுடன் மக்கள் பிரச்னைகளுக்காக இளைஞர்கள் போராடிவருகிறார்கள்.

ஆனால், உத்தரபிரதேசத்தில் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் இந்த விவகாரத்தில் முக்கியமாக கவனிக்க வைத்திருக்கிறது.

திருமண பேச்சின் போது விவாதம்

திருமண பேச்சின் போது விவாதம்

உத்தரபிரதேசத்தில் தொழிலதிபருக்கும் அரசு பணியாளருக்கும் குடும்பத்தாரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்ய அவர்களது பகுதியில் அமைந்துள்ள கோவிலில் இரு குடும்பத்தினரும் கலந்து பேசவிரும்பினர். பொருளாதார மந்த நிலை குறித்த விவாதம் எழும் வரை, திருமணம் குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாகத்தான் நடந்தது.

மோடி காரணமா?

மோடி காரணமா?

நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று மணமகள் காட்டமாக விமர்சனம் செய்ததும், அதை ஒப்புக்கொள்ளாத மணமகன், மோடி இதற்கு காரணமில்லை, உலக பொருளாதார மந்தமே காரணம் என்று பதில் கருத்து சொன்னார்.

கடுப்பான மாப்பிளை

கடுப்பான மாப்பிளை

விவாதம் சூட்டாகியதில் குடும்பத்தினர் பதறிபோயினர். சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இருவரும் திருமணத்தை நிறுத்தச்சொல்ல, குடும்பத்தினர் அதிர்ந்துபோயினர். வேறு வழியில்லாமல் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மோடிக்கு ஆதரவு

மோடிக்கு ஆதரவு

பிரதமரை முன்பின் பார்க்காவிட்டாலும், மோடிக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்களை இளைஞர்கள் முன்வைத்துவருகிறார்கள் என்பதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், திருமணம் நின்று போகுமளவுக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அவர்களது ஊர்காரர்கள். எது எப்படியோ, இளைஞர்களுக்கு அரசியல் தெரியாது அல்லது அரசியல் பேசமாட்டார்கள் என்ற கருத்தாக்கத்தை இது போன்ற சம்பவங்கள் உடைக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A couple in Uttar Pradesh reportedly cancelled their wedding just because they differed on their outlook towards
Please Wait while comments are loading...