Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛அத்திப்பட்டி’.. அப்படியே மண்ணில் புதையும் உத்தரகாண்ட் ஜோஷிமத் நகரம்.. அலறும் மக்கள்.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: நடிகர் அஜித் நடிப்பில் சிட்டிசன் என்ற திரைப்படத்தில், ‛அத்திப்பட்டி' எனும் கிராமம் கடலுக்குள் மூழ்கி காணாமல் போய் இருக்கும். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் எனும் அழகிய ஆபத்து நிறைந்த நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 500க்கும் அதகிமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த நகரமே மெல்ல மண்ணில் புதைந்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் மரண ஓலமிட்டு கதறி அழுது வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது தான் ஜோஷிமத் நகரம். இமயமலையின் 6150 அடி உயரத்தில் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த நகரம் ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. தவுலிகங்கா மற்றும் அலக்நந்தா நதிகள் விஷ்ணுபிரயாகில் இருந்து ஒன்று சேர்ந்து இந்த ஜோஷிமத் வழியே தான் கடந்த செல்கின்றன.

இமயமலையில் மலை ஏற செல்பவர்களையும், பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை செய்பவர்களுக்கும் இந்த ஜோஷிமத் நகரம் தான் முதலில் வரவேற்கும். மேலும் இந்த ஜோஷிமத்தை சுற்றி ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. ஹேம்குந்த் சாஹிப் உள்ளிட்ட முக்கிய மதம் சார் சுற்றலா தலங்களுக்மக்கள் ஜோஷிமத் நகரத்தின் வழியே தான் சென்று வருகின்றனர். மேலும் இந்திய ராணுவத்தின் மிக முக்கிய போக்குவரத்து இந்த ஜோஷிமத் வழியே நடந்து வருகிறது.

 திடீர் நிலச்சரிவு

திடீர் நிலச்சரிவு

தற்போது ஜோஷிமத் கிராமத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு அடிக்கடி நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சமீபகாலமாக அங்கு கட்டங்கள் அதிகமாக கட்டப்பட்ட நிலையில் மக்கள் தொகையின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. நிலநடுக்கம் அபாயம் கொண்ட பகுதியாக இது அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென ஜோஷிமத் பகுதியில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கிராமத்தில் உள்ள வீடுகளில் திடீரென்று வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. வீடுகள் இடியும் தருவாயில் உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வெளியேறியுள்ளனர்.

 மண்ணில் புதையும் வீடுகள்

மண்ணில் புதையும் வீடுகள்

தற்போதைய சூழலில் 570க்கும் அதிகமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று விரிசல் ஏற்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். மேலும் நிபுணர் குழுவும் அங்கு விரைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.

முதல்வர் விசிட்

முதல்வர் விசிட்

உத்தரகாண்ட்ட முதல் அமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஜோஷிமத் நகருக்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போதைய சூழில், அங்கு 60 குடும்பங்கள் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்த நிலையில் 29 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தங்களது பாதுகாப்பற்ற வீடுகளில் தொடர்ந்து வசித்து வரும் நிலையில் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டு வாடகையாக மாதம் 4,000 ரூபாய் முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

அழிவின் விளிம்பில் ஜோஷ்மத்

அழிவின் விளிம்பில் ஜோஷ்மத்

இந்நிலையில் தான் ஜோஷிமத் நகரம் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஜோஷிமத் நகரம் என்பது அழிவின் விளிம்பில் இருப்பது தெரியவந்துள்ளது. நிலச்சரிவில் இந்த நகரமே மூழ்கும் என தெரிவித்துள்ளனர். இந்த ஜோஷிமத் நகரம் குறித்து விஞ்ஞானிகள், புவியியல் ஆர்வலர்கள் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு வசிப்பது மிகவும் ஆபத்தானது. உயிருக்கு, உடைமைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சூழல் தான் உள்ளது என கடந்த 1976 முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நிலைமை ரொம்ப மோசமாகி உள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இதுதொடர்பாக மிஸ்ரா கமிஷன் அறிக்கையில் ஜோஷிமத் நகரத்தின் ஆபத்து பற்றிய முழுவிபரம் இருந்தது. அதில், ‛‛ஜோஷிமத் என்பது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் அமைந்துள்ள புவியியல் அமைப்பு மிகவும் மோசமானது. நிலச்சரிவு ஏற்ப்பட்ட நிலமான இங்கு மக்களின் எடைகளை தாங்கும் சக்தி என்பது மிகவும் குறைவானது. இதனால் அதிகளவிலான மக்கள் குடியேறுவதையும், கட்டுமான பணிகள் மேற்கொள்வதையும் அனுமதிக்க கூடாது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே தான் கடந்த 20 ஆண்டுகளாக கட்டுமானம், நீர் மின் திட்டங்கள் மற்றும் சாலை விரிவாக்கம் பணிகள் நடந்தன. இது நிலைமையை இன்னும் மோசமாக மாற்றி உள்ளன. மேலும் இங்கு ஓடும் நீரோடைகளின் அரிப்பும் ஜோஷிமத் அழிவின் விளம்புக்கு செல்ல முக்கிய காரணமாகும்

பணிகள் நிறுத்தம்

பணிகள் நிறுத்தம்

தற்போது ஜோஷிமத்தின் அழிவை காக்க வேண்டும் என்றால் உடனடியாக அங்குள்ள மக்களை அரசு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். அதன்பிறகு எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பது முக்கியமான விஷயமாகும். இந்நிலையில் தான் தற்போது முதற்கட்டமாக அந்த பகுதிகளில் நடக்கும் பல்வேறு கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+