65 கொரோனா நோயாளிகள் மரணம்.. மறைந்த மருத்துவமனை.. உத்தரகாண்டில் ஷாக்.. விசாரணைக்கு உத்தரவு
ஹரித்வார்: கொரோனா நோய்த்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மரணம் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் 24 மணி நேரத்திற்குள் கோவிட் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. ஹரித்வாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, 65 கோவிட் -19 நோயாளிகளின் இறப்பு குறித்த தகவல்களை மறைந்ததாக புகார் எழுந்ததால் சர்ச்சையாகி உள்ளத.
சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் விதிமுறைகளை மீறி ஹிரித்துவாரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை கொரோனா மரணங்களை தெரிவிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. ஏப்ரல் 25 முதல் மே 12 வரை பாபா பர்பானி என்ற அந்த தனியார் மருத்துவமனையில் அறுபத்தைந்து கோவிட் -19 நோயாளிகள் இறந்தனர், இறந்து போன 65 பேர் குறித்த தகவலை மாநில அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் சுபோத் யூனியல், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே அரசின் எச்சரிக்கையை அடுத்து இறந்தவர்கள் குறித்த தகவலை அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ளது. 65 பேர் இறந்தது உண்மை தான் என கூறியுள்ளது. சரியான நேரத்தில் தகவல்களை வழங்க முடியாமல் போனதற்காக ஊழியர்களின் பற்றாக்குறை காரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு கொரோனா.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மரணம் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் 24 மணி நேரத்திற்குள் கோவிட் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று தலைமை இயக்க அதிகாரி அபிஷேக் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்தசில வாரங்களில் உத்தரகண்ட் மாநிலத்தில் COVID-19 இறப்பு புள்ளிவிவரங்கள் திடீரென உயர்ந்துள்ளதால், தனியார் மருத்துவமனைகள் இறப்பு எண்ணிக்கையை தினமும் தெரிவிக்கக வேண்டும் என்று சுகாதார செயலாளர் அமித் நேகி அனைத்து மருத்துவமனைகளுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.. இறப்பு குறித்து தினமும் மருத்துவமனைகளால் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்பட வேண்டும், இல்லையெனில் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications