Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலி மனை நிலம்.. டக்குனு உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட பெண்கள்! கழுத்து வரை ஜல்லி.. பதறவைத்த வீடியோ

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ, இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. யாரிந்த பெண்கள்? என்ன நடந்தது இவர்களுக்கு? பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி வைக்க என்ன காரணம்?
மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ளது ஹினௌடா ஜோரோட் என்ற பகுதி.. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே. இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவர்.. இவர்கள் குத்தகைக்கு நிலம் எடுத்துள்ளனர். ஆனால், இந்த நிலத்தில் சிலர் சாலை அமைக்க முற்பட்டுள்ளனர். இந்த கட்டுமானத்திற்கு இப்பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்...

ஆனால் இவர்களின் ஆட்சேபனைகளை யாருமே கண்டுகொள்ளவில்லை.. அதனால், உள்ளூர் முக்கிய பிரமுகர்களின் உத்தரவின்பேரில், டிம்பர் லாரியின் மணல், ஜல்லியுடன் வேலையை துவக்க முடிவானது.

Bjp Congress Madhya Pradesh

என்ன காரணம்: இந்நிலையில் அந்த நிலத்தில் உறவினர்கள், சாலை அமைக்க முயன்றுள்ளனர்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பெண்களும், சாலை அமைக்கும் பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட மண் நிரப்பப்பட்ட லாரியின் முன்பு உட்கார்ந்து கொண்டு, போராட்டம் நடத்தினர்.. ஆக்ரோஷமாக 2 பெண்களும் கண்டன முழக்கங்களை எழுப்பியபோது, திடீரென எதிர்பாராத வகையில் லாரியில் இருந்த மண் மொத்தமும், அந்தப் பெண்கள் மீது கொட்டிவிட்டது.

அடுத்த சில நொடிகளிலேயே, முழுமையாக மண்ணில் இருவருமே புதைந்துவிட்டனர்.. அவர்களது இடுப்பு, கழுத்துவரை அந்த ஜல்லிக்கற்கள் குவியலுக்குள் உயிருடன் புதைப்பட்டுவிட்டார்கள்..

ஜல்லி கற்கள்: இதைப்பார்த்து பதறிப்போன கிராம மக்கள், துரிதமாக செயல்பட்டு அவர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டனர். ஆனால், அதற்குள், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டதில் 2 பெண்களுமே சுயநினைவை இழந்து மயங்கிவிட்டார்கள்.. பின்னர் அவர்களை மீட்டு, அங்கிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. ஆனால், கௌகரன் பிரசாத் பாண்டே, மகேந்திர பிரசாத் பாண்டே மற்றும் பலர் சேர்ந்துக்கொண்டு தங்களை தாக்கியதாகவும், தங்களை உயிருடன் அடக்கம் செய்யும்படி டிம்பர் லாரி டிரைவருக்கு அவர்கள் உத்தரவிட்டதாகவும், தங்கள் மீது வேண்டுமென்றே மண், ஜல்லியை கொட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். எனவே, இதுதொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

குற்றச்சாட்டு: இதனிடையே, மண்ணிலிருந்து உயிருடன் 2 பெண்கள் மீட்கப்படும் வீடியோதான் இணையத்தில் பரவி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன், இது மாநில அரசியலிலும் எதிரொலித்திருக்கிறது..

"பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் இதுதான் நிலைமை. பெண்களின் பாதுகாப்பு குறித்து பாஜக பேச வெட்கப்பட வேண்டும்" என சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடும் விமர்சனம் : பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மத்தியப் பிரதேசத்தில்தான் அதிகம் என்றும், பெண்களைப் பாதுகாப்பதில் மாநில பாஜக அரசு தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சித்து வருகிறது.. அதுமட்டுமல்ல, பாஜக அரசாங்கத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் தொடர்ச்சியான துன்புறுத்தலை எதிர்கொள்வதாகவும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன..

கைது நடவடிக்கை: இப்படி அரசியலில் இது தொடர்பான அதிர்வலைகள் தீவிரமாக எழுந்த நிலையில், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினார்கள்.

இறுதியில், சம்பந்தபட்ட டிரக்கை கைப்பற்றியுள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.. ஆனால், இதில் முக்கிய குற்றவாளியாக சொல்லப்படும் 2 பேர் தப்பியோடிவிட்டதால், அவர்களை தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஏடிஜி ஜெய்தீப் பிரசாத் சொல்லும்போது, இதுவொரு குடும்பப்பிரச்சனை என்றாலும், எங்கள் தரப்பிலான விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறோம் என்றார்.

ஆனாலும், இந்த சம்பவம் மத்தியப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி, பாஜக தலைமையிலான மத்தியப்பிரதேச அரசை கடுமையாகச் சாடியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+