மே மாதத்தைவிட ஜூன் மாதம் இன்னும் சிறப்பு.. வேக்சின் போடுவது இருமடங்கு அதிகரிப்பு
கடந்த மே மாதம் 30 ம் தேதி மத்திய அரசு சொன்னது என்னவென்றால் 11,95,70,000 கோவிட் தடுப்பூசி டோஸ்கள் ஜூன் மாதத்தில் வழங்கப்படும் என்று நாட்டிற்கு உறுதியளித்திருந்தது, அரசு சொன்னபடியே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆம், கடந்த மாதம் மொத்தம் 11,96,69,381 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 39,88,979 டோஸ்கள் போடப்பட்டிருக்கிறது.
நாட்டின் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி இயக்கம் மே மாதம் தொடங்கப்பட்டது. அந்த மாதத்தை விட இது கணிசமாக அதிகரிப்பு அகும், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 திட்டத்தின் படி 94.02 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்தது,. மே மாதத்தில், மொத்தம் 6,10,57,003 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன, அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 19,69,580 டோஸ்கள் மட்டுமே போடப்பட்டன.

எனவே இதை ஒப்பிட்டு பார்த்தால் மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் மாதாந்திர தடுப்பூசியின் வேகம் 96% ஆகவும், தினசரி தடுப்பூசி வேகம் 102% ஆகவும் அதிகரித்துள்ளது.
முன்னதாக தடுப்பூசியின் வேகம் ஏப்ரல் மாதத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட 34.5 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. அப்போது கூட 8,98,71,739 அளவுகளே போடப்பட்டன. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 29,95,724. ஏப்ரல் மாத தடுப்பூசி புள்ளிவிவரங்களை ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, தடுப்பூசியின் வேகம் 33.15% அதிகமாக உள்ளது.
யஏப்ரல் மாதத்தில், தினசரி தடுப்பூசி 13 நாட்களில் 30 லட்சம் அளவைக் கடந்தது, மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது வெறும் இரண்டு நாட்களில் நடந்தது. ஆனால் ஜூன் மாதத்தில், தினமும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசி அளவுகள் 21 நாட்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளில் தெரிகிறது.
ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை செயல்படுத்தப்பட்ட புதிய தடுப்பூசி கொள்கையின் கீழ், ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை பத்து நாட்கள், தடுப்பூசி வேகத்தை அதிகரித்தன. ஜூன் 27 அன்று மட்டும் 17,21,268 டோஸ்கள் போடப்பட்டன. மற்ற எல்லா நாட்களும் பெரிய அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஜூன் 29 அன்று 36,51,983 லட்சம் டோஸ்களும், ஜூன் 30 அன்று 27,60,345 டோஸ்களும் போடப்பட்டன. கடைசி 10 நாட்களில் சராசரியாக 52,55,937 டோஸ்கள் தினசரி வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசிகள் அதிகம் போடப்பட மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு முக்கிய காரணம் ஆகும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications