துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தாருங்கள்... கோபால கிருஷ்ண காந்தி கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரிக்குமாறு எதிர்க்கட்சி பொது வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதனை அனைத்து எம்பிக்களுக்கும் அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்தப் பதவிக்கு பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காந்திஜி மற்றும் ராஜாஜியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.

Vice-Presidential election, Gopalkrishna Gandhi writes letter to MP seeking support

இந்நிலையில் நாளை நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று கோபால கிருஷ்ண காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், துணை ஜனாதிபதி தேர்தலில் தனது பெயரை ஏராளமான அரசியல் கட்சிகளும், தனி நபர்களும் முன்மொழிந்துள்ளனர் என்றும், எந்தவித அச்சமும், பாகுபாடும் இல்லாமல் இந்திய மக்களுக்குச் சேவையாற்ற உறுதி பூண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

India's new President Ram Nath Kovind-Oneindia Tamil

இந்தக் கடிதத்தை அனைத்து எம்பிக்களுக்கும் கோபாலகிருஷ்ண காந்தி அனுப்பி வைத்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Gopalkrishna Gandhi, the opposition party general candidate of Vice-Presidential election writes letter to MP seeking support.
Please Wait while comments are loading...