இன்று ஏலத்தில் விடப்படுகிறது மல்லையாவின், கோவா பீச் வில்லா! ஆரம்ப விலை ரூ.85 கோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான, கோவா சொகுசு வில்லா இன்று ஏலத்தில் விடப்படுகிறது.

கோவாவின் கண்டோலியன் கடற்கரையை பார்த்தபடி அமைந்துள்ளது அந்த வில்லா. ஒரு காலத்தில் மிகப்பெரிய மதுபான விருந்துகள் இந்த பங்களாவில் வைத்துதான் நடைபெறும்.

Vijay Mallya's Kingfisher Villa in Goa to be auctioned

எஸ்.பி.ஐ. உள்ளிட்ட 17 வங்கிகளில் விஜய் மல்லையா வாங்கிய 9 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்தாததையடுத்து அந்த கடனில் ஒரு பகுதியை வசூலிக்க கோவா சொகுசு வில்லாவை வங்கிகள் ஏலத்தில் விட கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த பங்களாவை ஏலத்தில் விடுவது குறித்து வங்கிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து 6க்கும் மேற்பட்டவர்கள் ஏலத்தில் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். சொகுசு வில்லாவுக்கு அடிப்படை விலையாக ரூபாய் 85. 29 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடன் பாக்கியை தொடர்ந்து, மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The 17-lender consortium led by State Bank of India will auction the Kingfisher Villa, the sea-facing plush property once-owned by the beleaguered Vijay Mallya in Goa.
Please Wait while comments are loading...