நாலாப்பக்கமும் ரத்தம், அழு குரல்கள்! ஒடிசா ரயில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தகவல்
ஒடிசா: பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் சுமார் 233 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் இது குறித்து தெளிவாக விளக்கியுள்ளனர்.
12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. ஆனால், சான்ட்ராக்சி, காரக்பூர், பல்சோர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்துள்ளது. ஆனால், அது பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.

அதேபோல பெங்களூரிலிருந்து புறப்பட்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும், பத்ராக் ரயில் நிலையத்தை கடந்து பல்சோர் வந்து சேரவில்லை. இதேபோல சரக்கு ரயில் ஒன்றும், இதுபோன்று அடுத்த ரயில் நிலையத்தை வந்து சேராமல் இருந்துள்ளது. இதனையடுத்து சந்தேகம் அதிகரித்ததை தொடர்ந்து அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனர். அப்போதுதான் இந்த கோர விபத்து நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க தொடங்கியுள்ளனர். உதவிக்கு விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சுதந்திர இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட கோர ரயில் விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஏராளமான விபத்துக்கள் நடந்துள்ளன.
இந்நிலையில் இந்த விபத்தை நேரில் பார்த்த பஹானாகா கிராமவாசிகள் இது குறித்து விவரித்துள்ளனர். சமல் எனும் கிரமவாசி கூறியதாவது, "நான் எனது பெட்டிக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போதுதான் பலத்த சத்தம் கேட்டது. இதனையடுத்து உடனடியாக அங்கு சென்று பார்த்தேன். ஆனால் இருலில் என்னால் எதையும் சரியாக பார்கக்க முடியவில்லை. ரயில் பெட்டிகளில் விபத்தில் சிக்கியிருக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
அருகில் சென்று பார்த்தபோது பலரும் உதவி கேட்டு அழுதுக்கொண்டிருந்தனர். அதேபோல, சிலர் ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கியிருந்தனர். ரத்தம் எங்கு பார்த்தாரலும் சிதறி கிடந்தது. இரவு 7 மணிக்கு இந்த விபத்து நடந்தது" என்று கூறியுள்ளார். அதேபோல ரயில் பெட்டியில் சிக்கியிருந்தவர்கள் கூறுகையில்,

"நான் முதல் பெட்டியில் இருந்தேன். ரயில் விபத்துக்கு உள்ளாவது நன்றாக தெரிந்தது. எங்களுடைய பெட்டி தண்டவாளத்தைவிட்டு இறங்கி சறுக்கிக்கொண்டே சென்றது. யாரோ எனது பெட்டியின் ஜன்னலை உடைத்திருந்தார்கள். எனவே நாங்கள் அதன் வழியாக வெளியே வர முடிந்தது அதன் பின்னர் சரக்கு ரயில் ஒன்று எங்கள் ரயில் மீது மோதியது. இது பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதை பொன்ற ஓர் அதிர்வை கொடுத்தது" என்று கூறியுள்ளார்.
இவர் உட்பட பல மக்களின் உயிர்களை உள்ளூர் வாசியான சமல் உள்ளிட்ட சிலர் காப்பாற்றியுள்ளனர். இந்த ரயில் பெட்டிகளில் பெரும்பாலும் புலம் பெயர் தொழிலாளர்கள்தான் இருந்துள்ளனர் என்று உயிர் பிழைத்த சக புலம் பெயர் தொழிலாளியான மொண்டல் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications