For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள பஞ்சாயத்து அலுவலக கணிணிகளை முடக்கிய இணைய தாக்குதல்... பணம் கேட்டு அட்டூழியம்!

ஆசிய கண்டங்களில் கணினி தாக்குதல்களை ஏற்படுத்தி வரும் புதிய வைரஸான வான்னக்ரை தாக்குதலுக்கு உள்ளான கேரளாவைச் சேர்ந்த பஞ்சாயத்து அலுவலக கணினிகள் முடக்கப்பட்டுள்ளன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : நாடு முழுவதும் இணைய தாக்குதலை ஏற்படுத்தி வரும் வான்னாக்ரை தாக்குதலுபக்கு கேரளாவின் வயநாட்டை சேர்ந்த பஞ்சாயத்து அலுவலக கணினிகள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேன்சம்வேர் தாக்குதலில் இருந்து உலக நாடுகள் மீளுவதற்குள் மற்றுமொரு வைரஸான வான்னக்ரை கம்ப்யூட்டர்களை தாக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இணையதள உதவியுடன் கணினியில் ஊடுருவும் இந்த வைரஸ் கணிணியில் உள்ள தகவல்களை முடக்கிவிடுவதோடு, அவற்றை மீண்டும் நாம் பயன்படுத்த பெரும் தொகையை கேட்டு மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

ஏற்கனவே ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால் இந்தியா உள்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் கம்ப்யூட்டர் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதோடு ஐரோப்பிய நாடுகளில் அதன் தாக்கம் சீனா, ரஷ்யா, இந்தோனேசியா ஆகிய ஆசிய நாடுகளும் இணைய தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

ரேன்சம்வேர் தாக்குதல் அச்சம்

ரேன்சம்வேர் தாக்குதல் அச்சம்

இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் முக்கிய மருத்துவமனைகளில் கம்ப்யூட்டர் சேவை முடங்கியதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ரேன்சம்வேர் தாக்குதல் எங்கு தொடுக்கப்பட்டது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் தொடர்ச்சியான ஆய்வுகள் அடிப்படையில் பல்வேறு நாடுகள் தாக்குதலில் இருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. இதனிடையே ரேன்சம்வேர் தாக்குதல் அடங்குவதற்குள் மற்றுமொரு இணைய தாக்குதல் தவிர்க்க முடியாதது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கணித்திருந்தனர்.

பஞ்சாயத்து அலுவல கணிணி முடக்கம்

பஞ்சாயத்து அலுவல கணிணி முடக்கம்

தற்போது வான்னக்ரை இணைய தாக்குதலுக்கு கேரளாவைச் சேர்ந்த வயநாட்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள 4 கணிணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணிணித் தகவல்கள் முடக்கப்பட்டது குறித்து காவல்துறையினரும், சைபர்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

முடக்கப்பட்ட கணிணியின் ஓரத்தில் உங்களது தகவல்கள் முடக்கப்பட்டுள்ளன என்ற தகவல் இடம் பெற்றுள்ளதோடு தகவல்களைத் திரும்பப் பெற வேண்டுமெனில் குறிப்பிட்ட தொகையை எவ்வாறு செலுத்த வேண்டும் என்றும் அந்த ரெட் அலெர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டல்

மிரட்டல்

ஒரு வேளை பணத்தை செலுத்த மறுத்தால் நிரந்தரமாக அனைத்து தகவல்களும் முடக்கப்படும் என்றும் அந்த எச்சரிக்கையில் மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்தியா உள்பட 75 நாடுகளைச் சேர்ந்த 90 ஆயிரம் கணிணிகள் இந்த புதிய இணைய தாக்குதலுக்கு ஆளாகி எப்படி மீள்வது என்று தெரியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Four computers in a panchyat office in Kerala have been suspected to be hit by "WannaCry," the ransomeware and the incident took place at Waynad in Kerala at a panchayat office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X