ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை எதிர்க்கவில்லை.. ராஜ்யசபாவில் சரத்யாதவ் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதிய இடைவெளிக்கு முன்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில் அருண் ஜேட்லியுடன் நடந்த விவாதத்தின்போது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பதாக சரத்யாவ் தெரிவித்தார்.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ்சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் சர்ஜிகல் அட்டாக்கிலிருந்து இதுவரையில் உயிரிழந்துள்ள 25 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது குறித்தும், ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதால் 82 பேர் பலியாகி இருப்பது குறித்தும் அமளியில் ஈடுபட்டனர்.

We against restrictions on withdrawals from own accounts: Sharad Yadav

இந்த அமளிக்கிடையே, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான அருண்ஜேட்லி ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவிடம் ரூபாய் நோட்டு விவகாரத்தில் நிலைப்பாட்டினை தெரிவிக்குமாறு கேட்டார்.

அதற்கு பதில் அளித்த சரத்யாதவ் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்துள்ளதை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மட்டுமே எதிர்ப்பதாகவும் கூறினார். ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதை பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வரவேற்றுள்ளதை அடுத்து சரத்யாதவ் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஜம்மு அருகே நாக்ரோவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 7 வீரர்கள் மற்றும் 2 அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்த தவறியது குறித்தும் சரத்யாதவ் கேள்வி எழுப்பினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Leader of Opposition Arun Jaitley and JD(U) leader Sharad Yadav on Wednesday exchanged sharp barbs in the Rajya Sabha over the demonetisation issue as the Opposition stalled the pre-noon proceedings.
Please Wait while comments are loading...