For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் “யார்க்கர்”.. இஸ்லாமிய நாடுகளுடன் “செம க்ளோஸ்”! ரொம்ப பெருமையா இருக்கு - குஜராத்தில் பேச்சு

Google Oneindia Tamil News

காந்திநகர்: இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு நெருக்கமான உறவை வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இதில் மொத்தமாக 60.20 சதவீத மக்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள்.

2 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணி விறு விறு! தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.10,790 கோடி நிதி! ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணி விறு விறு! தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.10,790 கோடி நிதி!

குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தல்

குஜராத் மாநிலத்தில் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் நிறைவடைவதை அடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்ற நிலையில் 5 ஆம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இறுதிக்கட்ட பிரச்சாரம்

இறுதிக்கட்ட பிரச்சாரம்

இதனை அடுத்து 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் தொகுதிகளில் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். அந்த வகையில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடி பிரச்சாரம்

பிரதமர் மோடி பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல பகுதிகளுக்கு சென்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு திரட்டி வருகிறார். பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு அவர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையின் குஜராத்தின் முக்கிய நகரமான அஹமதாபாத்தில் அவர் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அரபு நாடுகள்

அரபு நாடுகள்

அப்போது பேசிய அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா நெருக்கமான உறவை வைத்து வருகிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளின் உயிரிய விருதுகளை எனக்கு வழங்கி இருக்கின்றன. இந்த விருதுகளால் எனக்கு மட்டும் இன்றி மொத்த குஜராத்திகளுக்கும் பெருமை." என்று அவர் பேசினார்.

மும்முனைப்போட்டி

மும்முனைப்போட்டி

குஜராத்தில் இதுவரை பாஜக, காங்கிரஸ் இடையே இரு முனைப்போட்டி மட்டுமே நிலவி வந்த நிலையில் தற்போது புதிதாக ஆம் ஆத்மி கட்சியும் நெருக்கடி கொடுத்து வருகிறது. மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருக்கும் அக்கட்சி தேர்தல் கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மோடியின் சொந்த மாநிலம்

மோடியின் சொந்த மாநிலம்

இது ஒருபுறம் இருக்க பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் இம்முறை அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலில் களம் கண்டுள்ளது பாஜக.

English summary
Prime Minister Narendra Modi has said in the Gujarat election campaign that India will have close relations with Muslim countries after 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X