பாஜக-வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபடுவோம் - கொல்கத்தாவில் சீறிய மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்து ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் சில மாநிலத்தில் போட்டியிட்டது.

மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் மாநில குழு கூட்டம் இன்று நடந்தது. இதில், மம்தா பானர்ஜி பங்கேற்று உரையாற்றினார். இதில், ''நாம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டும். வருகிற 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் பாஜக.வை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். பாஜக - வினர் கலகக்காரர்கள். அது ஓர் ஊழல் கட்சி. ஜனநாயகத்தினை அழிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

பிரசாந்த் கிஷோர்
இந்த கூட்டத்தில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்குமுன் பிரசாந்த் கிஷோர் மற்றும் மம்தா பானர்ஜிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதனால் பிரசாந்த் கிஷோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு செய்துவரும் வேலையில் இருந்து விடுபடுவார் என்றும் கருத்து நிலவியது. ஆனால், இந்த பொதுக்கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு அதை பொய் என நிரூபித்துள்ளார்.

ஜெய் பிரகாஷ் மஜூம்தார்
இன்று நடந்த கூட்டத்தில், பாஜக-வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட ஜெய் பிரகாஷ் மஜும்தார் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். கடந்த ஜனவரி மாதம் பாஜக-வுக்க்கு எதிராக பேசியதாக ஜெய்பிரகாஷ் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருந்த தன்னை கட்சி நீக்கியதும், திரிணாமுல் கட்சியில் இணைந்துள்ளார்.

தேர்தல்
கோவா மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் களமிறங்கியது. அதேநேரம், உத்தரப்பிரதேசத்தில் களம் இறங்காமல், சமாஜ்வாதி கட்சிக்கு பிரசாரம் செய்தது. உத்தரப்பிரதேசத்தில் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்தபோது, 'சில விஷயங்களுக்காக உபி தேர்தலில் போட்டியிடவில்லை' என தெரிவித்தார். அப்போதே, இது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தான் மம்தா செயல்படுவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில் 2024 தேர்தலில் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று கூறியுள்ளார் மம்தா. பெரிய கூட்டணியை மனதில் வைத்தே மம்தா இவ்வாறு கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications