பசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம் நமக்கு பசு மரியாதைக்குரியது... தாய் போன்றது - மோடி
பசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம், நமக்கு பசு ஒரு தாய் போன்றது. அது மரியாதைக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாரணாசி: பசுவையும் எருமையையும் கேலி செய்யும் மக்கள், நாட்டின் 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இத்தகைய கால்நடைகளால் நடத்தப்படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமக்கு பசு ஒரு தாய் போன்றது. அது மரியாதைக்குரியது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது வாரணாசி லோக்சபா தொகுதியில் ரூ.2095 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான இன்று அவருக்கு தலைவணங்குகிறேன். இந்த நாளை நாடு 'விவசாயிகள் தினமாக' கொண்டாடுகிறது என்றார்.
பசு, எருமை மாடுகளை கேலி செய்பவர்கள் கோடிக்கணக்கான மக்கள் நம்பி இருக்கும் வாழ்வாதாரத்தை மறந்து விடுகிறார்கள். பசு தாய் போன்றது. எங்களுக்கு புனிதமானது என்று குறிப்பிட்டார்.
சிலர் இங்கு பசுவை பற்றி பேசுவதையும், பசுவின் சாணத்தை பற்றி பேசுவதையும் குற்றமாக்கியுள்ளனர். பசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம், நமக்கு பசு ஒரு தாய் போன்றது. அது மரியாதைக்குரியது.
பசுவையும் எருமையையும் கேலி செய்யும் மக்கள், நாட்டின் 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இத்தகைய கால்நடைகளால் நடத்தப்படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். இந்தியாவின் பால்பண்ணைத் துறையை வலுப்படுத்துவது இன்று நமது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
நாட்டில் பால் உற்பத்தி 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சுமார் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இன்று உலக அளவில் 22 சதவிகித பாலை இந்தியா உற்பத்தி செய்கிறது. இன்று உத்தரபிரதேசம் நாட்டிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக மட்டுமல்லாமல், பால் துறையின் விரிவாக்கத்திலும் மிகவும் முன்னேறி உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டின் பால்வளத்துறையில் புதிய ஆற்றல், கால்நடை வளர்ப்பு, வெண்மை புரட்சி ஆகியவை விவசாயிகளின் நிலையை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications