For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரும்பான்மையுடன் வலுவான அரசை அமைப்போம்- அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோருவோம்: மோடி

By Mathi
|

டெல்லி: மத்தியில் பெரும்பான்மையுடன் வலுவான அரசை அமைப்போம்; பெரும்பான்மை அரசு அமைத்தாலும் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோருவோம் என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் நவ் டிவிக்கு நரேந்திர மோடி அளித்த பேட்டி:

தற்போதைய லோக்சபா தேர்தலில் பணவீக்க விகிதம் பற்றி காங்கிரசார் ஏன் பேசுவதில்லை? எனத் தெரியவில்லை. தேர்தல் ஆணையமானது பாஜகவுக்கும் எனக்கும் மட்டும் இடையூறு செய்யக் கூடியதாக இருக்கிறது.

We will form the strongest and the most stable govt after the Rajiv govt: Modi on Times Now

ஒருவாரத்துக்கு முன்பு எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்று உள்துறை அமைச்சகம் சொன்னது. ஆனால் வாரணாசியில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தும்போது என்னுடைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். இது ஆச்சரியமளிக்கிறது.

குஜராத்தி மொழியில் நீச்ச ராஜநீதி என பிரியங்கா சொன்னது ஜாதியைத்தான் என்பதாக அர்த்தம். ராஜிவ் பற்றி ஏதேனும் நான் தவறாக சொல்லியிருந்தால் பிரியங்காவின் கோபம் நியாயமானது. ஆனால் அப்படி எதுவும் நான் பேசவில்லையே.

எது கீழ்த்தரமான ராஜநீதி? காமென்வெல்த் ஊழல் கீழ்த்தரமான ராஜநீதி இல்லையா? இந்தியாவில் ஜனநாயகம் என்பது ஒரு குடும்பத்துக்கு மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதா?

தேர்தல் பிரசாரத்தின் போது என்னை ஏற்காதவர்கள் பாகிஸ்தானுக்கு ஓட வேண்டும் என்ற கிரிராஜ்சிங்கின் பேச்சை நான் கடுமையாக எதிர்த்தேன். அப்படி எதிர்க்காது இருந்தால் அத்தகைய அந்த பேச்சுகள் நின்று போயிருக்குமா?

தற்போதைய லோக்சபா தேர்தலில் பாஜக மதபிரச்சனையை முன்வைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில் சர்ச்சைக்குரிய பேச்சுகளை எதிர்க்கிறேன்.

சோனியா காந்தி குடும்பத்தை பாதுகாப்பதில் டைம்ஸ்நவ்க்கு ஏன் இவ்வளவு அக்கறை?. எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை ஏன் மேற்கு வங்கத்தில் தங்க அனுமதிக்கவில்லை?. ஆனால் வங்கதேச ஊடுருவல்காரர்களை மட்டும் மேற்கு வங்கத்தில் அனுமதிப்பது ஏன்?

ஹிந்து மதமல்ல வாழ்வியல் முறை

ஹிந்து என்பது மதம் அல்ல. ஒரு வாழ்க்கை முறை என்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு. இதுதான் எங்கள் கருத்து. எங்களைப் பொறுத்தவரை இந்தியாவை தாயகமாக கொண்ட அனைத்து மதத்தினரும் நாடு திரும்பலாம் என்பது எங்கள் நிலைப்பாடு.

உலகில் யாருடைய ரத்தமும் நம்மை போல் இருந்தாலும் அவர்களை திரும்ப அழைக்கலாம். நமது மண்ணை விரும்பிகிறவர்களை நாம் ஏற்கவில்லையே ஏன்?.

மாயா கோடானி விவகாரம்

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் பற்றி அரசியல் சாசன அமைப்புகள் நம்பிக்கை வைத்தால் போதும். குஜராத் கலவர வழக்கில் சிறையில் இருக்கும் மாயா கோடானியை அமைச்சரவையில் சேர்த்த போது அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அதன் பின்னர்தான் அவர் மீது வழக்கு பதிவானது.

ஆனால் டெல்லியில் 84ஆம் ஆண்டு கலவரத்தை அரசே அனுமதித்தது என்பது எனது குற்றச்சாட்டு. பொதுவாக எம்.பிக்கள் எண்ணிக்கை என்பது நாடாளுமன்றத்துக்குத்தானே தவிர அரசை வழிநடத்த அல்ல என்று நினைக்கிறேன்.

வலிமையான மத்திய அரசு- அனைத்து கட்சி ஆதரவு

என்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்த போது பாஜகவுக்கு கூட்டணிகள் கிடைக்காது என்று ஊடகங்கள் கூறின. ஆனால் பாஜக முதல் முறையாக 25 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. நல்லாட்சி நடத்த இந்த நாடு எனக்கு போதுமான எம்.பிக்களை தரும் என்று நம்புகிறேன்.

பொதுவாக தேர்தல் பிரசாரங்களைப் பொறுத்து கூட்டணிகள் அமைவதில்லை. அரசியலும் இருப்பது இல்லை. தேர்தல் என்பது வேறு.. அரசியல் என்பது வேறு.

ஜனநாயகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை மதிப்பது எனது பொறுப்பு. தேர்தலில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறும். நாங்கள் 350 இடங்களைப் பெற்றாலும் கூட அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவை என கருதுகிறவன்.

ராஜிவுக்குப் பின்னர் மிகப் பெரும்பான்மை பலத்துடன் வலுவான ஆட்சியை அமைப்போம். மே 16-ந் தேதியன்று ராஜிவுக்கு பிந்தைய வலிமையான அரசு அமைவதை இந்த நாடு பார்க்கும்.

மமதாவை விமர்சிப்பது ஏன்?

35 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சியில் மேற்கு வங்கத்தையும் கிழக்கு இந்தியாவையும் நாசப்படுத்திவிட்டனர். இடதுசாரிகளின் சீரழிவில் இருந்து மேற்கு வங்கத்தையும் கிழக்கு இந்தியாவையும் மமதா மீட்டெடுப்பார் என நம்பினேன். ஏப்ரல் மாதம் பிரசாரம் செய்த போது மமதாவை பாராட்டினேன்.. ஆனால் உண்மை தகவல்களை பார்த்துவிட்டு இப்போது விமர்சிக்கிறேன்

இளம்பெண் வேவு வழக்கு

குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் கவனித்து வருகிறது. இந்த விவகாரத்தில் எந்த ஒரு மத்திய அரசின் விசாரணையையும் நான் எதிர்க்கவில்லை. என்னை சிறைக்கு அனுப்புவேன் என்று குஜராத்தில் பேசினார் மத்திய அமைச்சர் கபில் சிபல்.. அதற்குதான் நான் பதிலளித்தேன்.

உச்சநீதிமன்றத்தில் இருக்கும் இளம்பெண் வேவு விவகாரத்தை இங்கே பேசக்கூடாது என கருதுகிறேன். நீங்கள் உச்சநீதிமன்றத்தை விட மேலானவர் எனக் கருதினால் அது உங்கள் விருப்பம். உச்சநீதிமன்றம் விசாரிக்கும் ஒரு வழக்கில் நான் ஏன் தலையிட வேண்டும்.

தூர்தர்ஷன் எடிட்டிங் ஒரு சதி

என்னுடைய தூர்தர்ஷன் பேட்டி முழுமையாக ஒளிபரப்பானதா? சென்சார் செய்தார்களா என தெரியாது. தூர்தர்ஷன் பேட்டி எடிட் செய்யப்பட்டது என்பது தணிக்கை அல்ல.. அது ஒரு சதி என்றே கருதுகிறேன்.

சோனியா- ராகுல் விமர்சனம் ஏன்?

சோனியா மற்றும் ராகுல் காந்தியை நான் எப்போது விமர்சிக்க ஆரம்பித்தேன்? பிரதமரின் செயலர் சஞ்சய் பாரு புத்தகம் வெளியான பின்னர்தான் அம்மா- மகன் அரசு என விமர்சித்தேன். பிரியங்கா காந்தி என்னை தொடர்ந்து விமர்சிக்கும் போது எப்படி நான் பதில் சொல்லாமல் இருக்க முடியும்?

ஆனால் பிரியங்காவை மகள் என கூறியதாக 48 மணி நேரம் விமர்சித்தவர்கள் ஒரிஜினல் டேப் வெளியானவுடன் அமைதியாகிவிட்டனர். சோனியா உடல்நலம் குன்றியபோது அவர் குணமடைய வேண்டும் என்று முதலில் செய்தி அனுப்பியது நான்.

என்னுடைய 14 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் யாரையும் நான் பழிவாங்கியது கிடையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேர்தலில் ஊழல் என்பது பிரதான பிரச்சனை என்பதால் அது பற்றி பேசுகிறோம்.

நில ஒதுக்கீடு விவகாரம்

அதானி குழுமம் நாடு முழுவதும் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளது பற்றி பேசாமல் குஜராத் பற்றி மட்டும் பேசுகிறீர்கள். குஜராத்தில் எதற்கும் உதவாத கட்ச் பகுதி சதுப்புநிலத்தைத்தானே ஒதுக்கீடு செய்தோம்.

இந்த தொழிலதிபர்களுக்கான நிலம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மாவுடன் குஜராத் அமைச்சர் விவாதிக்க தயாராக இருக்கிறார். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஏழைகளுக்கான மானியங்கள் வழங்குவதை நான் எப்போதும் எதிர்க்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் எங்கள் கொள்கை.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையா?

பாகிஸ்தான் முதலில் துப்பாக்கிசூடுகளையும் குண்டுவெடிப்புகளையும் முதலில் நிறுத்தட்டும். அதுவரை பேச்சுவார்த்தை நடைபெறாது. மத்தியில் வலுவான அரசு அமைந்தால் அண்டை நாடுகளின் நிலைப்பாடும்கூட மாறலாம்.

நான் தாவூத் பற்றி பேசியது உள்துறை அமைச்சர் ஷிண்டேவுக்கான பதில்தானே தவிர எந்த ஒரு தனிப்பட்ட தீவிரவாதியைப் பற்றியும் நான் பேசவில்லை. பின்லேடனை ஒழிக்கும் முன்னர் பிரஸ் மீட் வைத்து பேசிக் கொண்டிருந்ததா அமெரிக்கா என்பதுதான் என் கேள்வி.

<iframe width="650" height="417" src="//www.youtube.com/embed/JIjMGNwStt0?autoplay=1&logo=1&hideInfos=0&start=0&syndication=127059&foreground=&highlight=&background="></iframe>

இந்திய தூதரகங்களை அமெரிக்கா வேவு பார்த்ததா? என்பது பற்றி எதுவும் தெரியாது.பின்னர் ஆராய்வோம்.

இவ்வாறு மோடி தமது பேட்டியில் கூறியிருந்தார்.

English summary
BJP's Prime Ministerial Candidate Narendra Modi said an interview to Times Now TV that "We will form the strongest and the most stable govt after the Rajiv govt" on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X