'பாஜக வைரஸ்' சானிடைசரால் கழுவி 140 பேரை மீண்டும் கட்சியில் சேர்த்த திரிணாமுல் காங்.- வைரல் வீடியோ
கொல்கத்தா: பாஜக வைரஸ் ஒட்டியிருக்கும் என்பதால் 140 பேரை சானிடைசரால் கழுவி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்த்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் என பலரும் கொத்து கொத்தாக பாஜகவுக்கு தாவினர். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இப்படி கட்சி தாவினர்.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வென்று மமதா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். இதனையடுத்து பாஜகவுக்குப் போன தலைவர்கள், தொண்டர்கள் பலரும் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸுக்கு திரும்பி வருகின்றனர்.
பாஜகவுக்கு தாவியவர்களில் முக்கியமானவர் முகுல் ராய். தற்போது பாஜகவில் இருந்து முகுல் ராய் விலகிவிட்டர். இதேபோல் 140க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரிணாமுல் காங்கிரஸில் மீண்டும் சேர்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியில் மீண்டும் சேர்ந்தவர்கள் மீது சானிடைசர் தெளித்து பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொடி கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த திரிணாமுல் நிர்வாகிகள், பாஜக என்கிற வைரஸ் ஒட்டி இருக்கும். அதனை கழுவிவிடத்தான் சானிடைசர் தெளித்தோம் என்றனர்.
கட்சிக்கு மீண்டும் திரும்பியவர்களுக்கு சானிடைசர் தெளித்த நிகழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதனை பாஜகவினர் கடுமையாக கண்டித்தும் வருகின்றனர்.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications