டெல்லியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ரூ.2.7 கோடி லம்போர்கினி கல்லார்டோ கார்
டெல்லி: டெல்லியில் உள்ள பதர்பூர் பகுதியில் ரூ.2.7 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ கார் திடீர் என தீப்பிடித்து எரிந்தது.
தெற்கு டெல்லியில் உள்ள பதர்பூர் பகுதியில் ரூ.2.7 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ காரில் ஒருவர் இன்று காலை சென்றுள்ளார். காலை 9 மணி அளவில் பதர்பூர் மேம்பாலத்திற்கு கீழே செல்கையில் அந்த காரின் பின்புறத்தில் திடீர் என தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து காரில் இருந்த நபர் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார். கார் கொழுந்துவிட்டு எரிந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அந்த காட்சியை தங்களின் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.
லம்போர்கினி நிறுவனம் கல்லார்டோ தயாரிப்பை கடந்த 2013ம் ஆண்டோடு நிறுத்திவிட்டது. லம்போர்கினி 14 ஆயிரம் கல்லார்டோ கார்களை விற்பனை செய்துள்ளது. கல்லார்டோ தயாரிப்பை நிறுத்திய பிறகு லம்போர்கினி ஹுராகன் காரை கடந்த 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
லம்போர்கினி கல்லார்டோ சாலையில் சென்றாலே அனைவரும் திரும்பிப் பார்ப்பார்கள். இந்நிலையில் டெல்லி சாலையில் பாதி எரிந்து சாம்பலான கல்லார்டோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
எரிந்து மீதம் இருந்த காரை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications