For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரன் கைது.. அப்படியானால் தேர்தல் ஆணைய அதிகாரிகளையும் விசாரிப்பார்களா?

தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளும் விசாரிக்கப்படுவார்களா என வினா எழுந்துள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலையை பெற தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் பணம் மூலம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஒபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு கோஷ்டிளாகப் பிளவுபட்டது. அதனையடுத்து நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்ற எழுந்த போட்டியில், தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது.

whether Election commission officials will be inquired?

அந்த இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் மூலம் பணம் கொடுத்ததாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடந்த 22ஆம் தேதியிலிருந்து தினகரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அவரை நேற்று இரவு 10 மணிக்கு கைது செய்துள்ளனர்.

தினகரனின் டெலிபோன் உரையாடல்கள் மத்திய உளவுத்துறையால் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. அந்த உரையாடல்களை முக்கிய ஆதாரமாகக் காட்டித்தான் தினகரனிடமிருந்து உண்மைகளை வரவழைத்துள்ளது டெல்லி குற்றப் பிரிவு போலீஸ். இறுதியில், தினகரனும் உண்மையை ஒத்துக்கொண்டதால் அவரும் அவரும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் தினகரன் உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி குற்றப்பிரிவு போலீசார், தினகரன் தேர்தல் ஆணைய ஆதிகாரிகளுக்கு 50 லட்சம் கொடுப்பதாக பேரம்பேசி, முதல் தவணையாக சில கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது. அப்படியானால் இந்த வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

ஆகையால், தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுத்ததாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கூறுவதனால், தேர்தல் ஆணையத்திலுள்ள கருப்பு ஆடுகள் விசாரிக்கப்படுவார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

English summary
After the arrest of TTV Dinakaran in election commission bribery case, the question raised whether Election commission officials will be inquired?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X