கிழிந்த ஜீன்ஸ் பேண்டுடன் திலீப்பை ஸ்பாட் விசிட் அழைத்து சென்ற போலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை பாவனா கடத்தில் வழக்கில் ஆதாரங்களை சேகரிக்க ஸ்பாட் விசிட்டுக்கு நடிகர் திலீப் கிழிந்த பேண்டுடன் அழைத்து செல்லப்பட்டார்.

பிரபல திரைப்பட நடிகையான பாவனா கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் திலீப்புக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதைத் தொடர்ந்து அவரும் கடந்த 2 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அவரை 2 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 மேலும் கைது செய்ய

மேலும் கைது செய்ய

இரு எம்எல்ஏ-க்கள், நடிகையும் திலீப்பின் மனைவியுமான காவ்யா மாதவன் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் மேலும் சில முக்கிய புள்ளிகள் பிடிபடுவர் என்று தெரிகிறது.

 ஸ்பாட் விசிட்

ஸ்பாட் விசிட்

இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ள திலீப்பிடம் "குற்றம் நடந்தது என்ன?" என்பது குறித்து விசாரணை நடத்தவும் ஆதாரங்களை சேகரிக்கவும் அவரை ஸ்பாட் விசிட்டுக்கு போலீஸார் இன்று அழைத்து சென்றனர். அப்போது அவர் வெள்ளை நிற சர்ட்டும், கிழிந்த புளூ நிற பேண்டும் அணிந்திருந்தார். அவர் சொந்த ஆடைகளை அணிந்துகொள்ள உரிமையுள்ளது. எனவே பேஷனுக்காக அவர் தனது கிழிந்த பேண்ட்டை அணிந்திருந்தார். ஆனால் போலீசார் அடித்து கிழித்துவிட்டதாக ரசிகர்கள் பேசிக்கொண்டனர்.

 இரு ஹோட்டல்கள்

இரு ஹோட்டல்கள்

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலை நடிகர் திலீப் சந்தித்ததாக கூறப்படும் இரு ஹோட்டல்களுக்கு திலீப் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் பல்சர் சுனிலுடன் செல்பி எடுத்துக் கொண்டாக போலீஸாருக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் திருச்சூரில் உள்ள டென்னிஸ் கிளப்புக்கு திலீப் அழைத்து செல்லப்பட்டார்.

 திலீப்பை பார்க்க கூட்டம்

திலீப்பை பார்க்க கூட்டம்

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நாள்களில் திலீப்பை காண கூட்டம் திரண்டதை போல் அவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இடங்களிலெல்லாம் கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத கூட்டத்தின் மத்தியில் கூச்சல் குழப்பங்களுக்கிடையே திலீப் கொண்டு செல்லப்பட்டார். கடத்தல் சம்பவம் தொடர்பாக திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் மற்றும் அவரது தாய் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two days after actor Dileep was arrested in connection with the sensational actress attack case, the police on Thursday continued recreating the crime trail with the star.
Please Wait while comments are loading...