For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஞ்சாப் தேர்தலை விட்டு விலகி இருக்க கூறியது பாஜக.. நான் கட்சியை விட்டே விலகிட்டேன்.. சித்து

Google Oneindia Tamil News

டெல்லி: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தல் விவகாரத்தில் இருந்து என்னை விலகி இருக்குமாறு பாஜக கூறியதனால் தான் நான் எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

3 முறை அமிர்தசரஸ் பாஜக எம்.பியாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு கடந்த தேர்தலில் சீட் அளிக்கப்படவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த சித்துவுக்கு பாஜக மாநிலங்களவை நியமன எம்.பி. பதவிவை வழங்கியது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாநில பாஜக கூட்டணி அரசுடன் அதிருப்தி போக்கையே சித்து கடைபிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, திடீர் திருப்பமாக சித்து தமது மாநிலங்களவை எம்.பி. பதவியை ஜினாமா செய்திருப்பது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நவ்ஜோத் சிங் சித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராஜினாமா ஏன்?

ராஜினாமா ஏன்?

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே தான் நான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.

பஞ்சாப் தான் எல்லாமே

பஞ்சாப் தான் எல்லாமே

என்னைன் பொறுத்த வரையில் பஞ்சாப் தான் எனக்கு எல்லாமே. எந்த கட்சியையும் பஞ்சாப்யை விட பெரியதாக நான் கருதவில்லை. பஞ்சாபை விட்டும் அந்த மக்களை விட்டும் தான் எங்கும் செல்ல மாட்டேன். பஞ்சாப் மற்றும் அமிர்தசரஸ் மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம்.

அடுத்தது ஆம் ஆத்மியா?

அடுத்தது ஆம் ஆத்மியா?

அடுத்து ஆம் ஆத்மியில் இணையப்போகிறீர்களா என அவரிடம் செய்தியாளர்களிடம் தொடர்சியாக கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு அவர் மலுப்பலான பதிலயே அளித்தார். பஞ்சாப் மாநிலத்தின் வளர்சிக்காக செயல்படும் கட்சியுடன் தான் நான் நிற்பேன் என்று கூறினார்.

சொல்லப்படும் தகவல்

சொல்லப்படும் தகவல்

அவரது மனைவி நவ்ஜோத் கவுர் சித்துவும் மாநில அரசின் முக்கிய பொறுப்பு ஒன்றில் உள்ளார். எனவே அவரும் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் சேர உள்ளதாகவும் சித்து அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

English summary
Former BJP MP Navjot Singh Sidhu broke his silence on his resignation saying it was because the party asked to stay away from the Punjab elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X