'ரஜினிஜி' யை சந்திப்பது ஏன்? நரேந்திர மோடி விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சிக்மகளூர்: சென்னை செல்லும் தாம் ஏன் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க இருக்கிறேன் என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கப் போகிறேன். அப்போது அவருக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க இருக்கிறேன்.

நான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறுவேன் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்திருக்கிறார். அவர் எங்கள் குஜராத் மாநிலத்துக்கு வரலாம்.
அப்படி வந்தால் தேவகவுடாவை அவரது மகன் குமாரசாமியைவிட நன்றாக நான் பார்த்துக் கொள்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications