ஷாப்பிங்கிற்கு வந்தீங்க, நகையை வாங்குனீங்க.. அதுமட்டும் எப்படி? மனைவிக்கு ஷமி சரமாரி கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தன் மீது புகார் கூறிய மனைவிக்கு ஷமி சரமாரியாக கேள்விகள்- வீடியோ

  டெல்லி: தன்மீது மனைவி சுமத்தும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

  முகமது ஷமி வேறு பெண்களுடன் ஆபாச சாட் செய்வதாகவும், கள்ளத்தொடர்புகள் வைத்துள்ளதாகவும், தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அவர் மனைவி ஹசின் ஜகான் குற்றம்சாட்டியுள்ளார்.

  கொல்கத்தா போலீசில், ஹசின் ஜகான் இதுகுறித்து புகார் அளித்தார்.

  குமுறல்

  குமுறல்

  இந்த நிலையில்தான், சமீபத்தில் வெளியான, பிசிசிஐ ஒப்பந்தத்தில் முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை. மனைவி குற்றச்சாட்டுகளை தொடர்ந்துதான் ஷமி பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்தெல்லாம் இன்று செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியொன்றில் ஷமி குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

  5 வருடங்கள் இல்லை

  5 வருடங்கள் இல்லை

  ஷமி கூறியுள்ளதாவது: என்மீதான குற்றச்சாட்டுகளில் சிறிதும் உண்மையில்லை, ஆதாரங்களும் இல்லை. கடந்த 5 வருடங்களாக நான் எனது மனைவியை கொடுமைப்படுத்தி வருவதாக புகாரில் கூறியுள்ளார். ஆனால், எங்களுக்கு திருமணம் நடைபெற்றே நான்கு வருடங்கள்தான் ஆகிறது. ஒருவேளை ஐந்து வருடங்களாக நான் கொடுமைப்படுத்தியிருந்தால், இப்போது திடீரென எனது மனைவி புகார் அளிக்க தேவை என்ன வந்தது?

  ஆதரவாக இருந்தேன்

  ஆதரவாக இருந்தேன்

  என்னை பொறுத்தளவில் இது எனக்கு எதிராக, திட்டமிட்ட சதி. நானும் பிறரை போலத்தான், மனைவி, குழந்தையுடன் சேர்ந்து இருக்கவே ஆசைப்படுகிறேன். பேஸ்புக் பக்கத்தில் எனது மனைவியை பர்தா அணியவில்லை என்று, சிலர் கண்டித்தபோது கூட நான் எனது மனைவிக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டேன். இப்போது கூட எனது மனைவியை விட்டுக்கொடுக்க மனமில்லை.

  எனது எண் இல்லை

  எனது எண் இல்லை

  எனது மனைவி காண்பிக்கும் செல்போன் எண்ணுடையதில்லை, அந்த எண்ணும் என்னுடையது இல்லை. நான் செய்யாத தப்பை ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் எனது குடும்பத்தோடு எவ்வளவு அன்னியோனியமாக இருந்தேன் என்பது எல்லோருக்குமே தெரியும். நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தது எங்களுக்கு மட்டுமல்ல பிறருக்கும் தெரியும். சமீபத்தில் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் கூட, ஷாப்பிங் கூட்டிச் செல்ல அவர் வலியுறுத்தினார். நான் தேர்வாளர்களுடனான ஆலோசனையில் இருந்தபோதுகூட, இடைவெளியில் அவரை ஷாப்பிங் அழைத்து சென்றேன். இந்தியா திரும்பிய பிறகுகூட ஷாப்பிங் சென்றோம். நகை வாங்கி கொடுத்தேன். ஹோலியை சேர்ந்தே கொண்டாடினோம். ஏன் திடீரென எனது மனைவி மாறிவிட்டார் என தெரியவில்லை.

  மாமனார் நன்றாக பேசினார்

  மாமனார் நன்றாக பேசினார்

  பெரிய சதி இதன் பின்னணியில் இருக்கிறது. எனது கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்கும் முயற்சியாகவும் இருக்கலாம். நான் ஹசினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச விரும்பினேன். ஆனால் எனது போன் அழைப்புகளை அவர் எடுக்கவில்லை. ஆனால், விரைவிலேயே மனைவியை சந்திப்பேன். எப்போதுமே இப்போது உள்ளதை போல மனைவியுடன் சேர்ந்து வாழ்வேன். நான் எனது மாமனாருடன் பேசியபோது அவர் கடுமை காட்டவில்லை. எனவே விரைவில் இப்பிரச்சினை சரியாகும் என நம்பிக்கையுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  India cricketer Mohammed Shami has defended himself amid claims by his wife Hasin Jahan of adultery, torture and threats of being killed for over two years.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற