"அது"க்கு நோ சொன்ன மனைவி.. அதுக்குன்னு இப்படியா.. கணவனுக்கு வந்துச்சு பாருங்க கோபம்.. பெருந்துயரம்
நல்ல நேரம் காரணம் காட்டி கணவனுடன் சேர்ந்து வாழ்வதை மனைவி தவிர்த்துள்ளார்
ராய்ப்பூர்: இந்த கொடுமையை பாருங்க.. நல்ல நேரம் அமையாததால், கணவருடன் மனைவி சேராமலேயே இருந்துள்ளார்.. இப்போது கடைசியில் விஷயம், விபரீதத்தில் வந்து முடிந்துவிட்டது..!
அந்த நபர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சிங்.. கடந்த 2010ம் ஆண்டில் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.. இரு வீடுகளிலும் பார்த்து, தம்பதிகளின் முழு சம்மதத்தையும் கேட்டுதான் திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு சந்தோஷ் சிங் தன் மனைவியிடம் 11 நாட்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து இருக்கிறார்...

மனைவி
அதற்கு பிறகு கணவனை மனைவி நெருங்கவே இல்லையாம். தினம் தினம் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி, விலகியே இருந்துள்ளார்.. இந்த சூழலில் ஒருநாள், மனைவி அவருடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.. அதற்கு பிறகு கணவன் வீட்டிற்கு திரும்பி வரவும் அவருக்கு பிடிக்கவே இல்லை.. அம்மா வீட்டிலேயே வருடக்கணக்கில் இருந்துள்ளார்.

என்ன ஆனது?
மாமியார் வீட்டுக்கு சென்று, ஒன்றாக வாழலாம் என்று மனைவியிடம் கெஞ்சி உள்ளார் சந்தோஷ் சிங்.. அப்போதும் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி, கணவருடன் செல்வதை தவிர்த்து விடுவாராம் மனைவி.. இப்படியே மாமியார் வீட்டுக்கு நடையாய் நடந்துள்ளார் சந்தோஷ்.. வருடங்களும் உருண்டன.. கடைசியில் 11 வருடங்கள் ஆகிவிட்டன.. இன்னும் மனைவி கணவனுடன் சேரவே இல்லை..

விரக்தி
இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ் சிங், பேசாமல் விவாகரத்து செய்துவிடலாம் என்று முடிவெடுத்து, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருக்கிறார்... ஆனால், அரசு பணிகளை காரணம் காட்டி அதற்கும் கோர்ட்டுக்கு வராமலும் ஆஜராகாமலும் இருந்துள்ளார் மனைவி.. இதற்கு பிறகு பிளாஸ்பூர் ஹைகோர்ட்டில் சந்தோஷ் சிங் வழக்கு தொடர்ந்துள்ளார்.. ஒருவழியாக அப்போதுதான் கோர்ட்டுக்கு வந்திருந்தார் மனைவி..

அதிர்ச்சி
ஏன் கணவருடன் நீங்கள் ஒன்றுசேர்ந்து வாழவில்லை? என்று கோர்ட்டில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது... அதற்கு மனைவி, "நல்ல நேரம் வரல.. நானும் வெயிட் பண்ணிட்டுதான் இருந்தேன்.. நாங்கள் ஒன்று சேர நல்ல நேரம் அமையவே இல்லை. அதனால்தான், கணவருடனும் செல்லவில்லை" என்று சொல்லியிருக்கிறார்... இந்த பதிலை கேட்டு நீதிமன்றமே அதிர்ச்சி அடைந்தது.. "வாழ்வதற்கு நல்ல நேரம் பார்த்து இப்போது பிரிவில் அல்லவா விஷயம் வந்து நின்றுள்ளது, இந்த வழக்கில் உறவை முறிப்பதற்கு நல்ல நேரத்தையே ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறிய நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications