திரண்டு நின்ற குஜராத்திகள்.. தாய்மொழிலதான் பேசனும்! சுடசுட அட்வைஸ் கொடுத்த அமித்ஷா - அப்போ இந்தி?
காந்திநகர்: பொதுமக்கள் தங்கள் தாய்மொழியை விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும், அனைவரும் தாய்மொழியிலேயே பேச வேண்டும் எனவும் குஜராத்தி மக்கள் முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
குஜராத் கல்வி சங்கத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், "தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் தாய்மொழியினை விட்டுக்கொடுக்க கூடாது. நம் நாட்டில் எத்தனை மொழிகள் இருக்கின்றனர் என்பது முக்கியமில்லை.

எந்த மொழியும் கற்கலாம்
எந்த மொழியையும் நாம் அழிய விடக்கூடாது என நாம் முடிவு செய்திட வேண்டும். இதற்கான அவசியம் தற்போது நமக்கு ஏற்பட்டு இருக்கிறது. எந்த மொழியை வேண்டுமானாலும் நீங்கள் கற்கலாம். ஆனால், தாய் மொழியை எப்படிப்பட்ட சூழலிலும் நீங்கள் விட்டுக்கொடுக்கவே கூடாது.

தாய் மொழியில் பேசுங்கள்
மாணவர்களிடம் ஆசிரியர்கள் உரையாடுவதற்கு தாய் மொழியை பயன்படுத்துங்கள். இளைஞர்கள் தங்களின் தாய்மொழியை பாதுகாப்பதுடன் முன்னெடுத்து கொண்டு சென்றிட வேண்டும். பெற்றோர்கள் வீடுகளில் குழந்தைகளிடம் தாய்மொழியில் பேச வேண்டும்." என்று கேட்டுக்கொண்டார்.

அமித்ஷாவுக்கு எதிர்ப்பு
அதேநேரம் மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தமிழ்நாட்டில் அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற 37 வது நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டத்தில் இந்தி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சைக்கு உள்ளானது.

இந்தி கட்டாயம்
"அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து உள்ளார். 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கட்டாயம் வழங்க வேண்டும். அலுவல் மொழியான இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கியமான அங்கமாக மாற்றுவதற்கான நேரம் இது.

இந்தியில் பேச வேண்டும்
இந்தி மொழியை நாம் கொண்டு வருவது உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும். பல்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள் தங்களுக்கு இடையே உரையாடும்போது இந்தியில் பேச வேண்டும்." என்றார். இந்த பேச்சுக்கு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் கண்டங்கள் எழுந்தன.

ஒற்றுமைபடுத்தும் இந்தியா
இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் இந்தி தினத்தை முன்னிட்டு அமித்ஷா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமை என்னும் கயிற்றில் இணைக்கிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழன் இந்திதான். மோடி அரசாங்கம் இந்தி உட்பட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறது. இந்தியை பாதுகாக்கவும், பிரபலப்படுத்தவும் பங்காற்றியவர்களுக்கு வணக்கம்." என்றார்.

அலுவல் மொழிக்கூட்டம்
இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு தீர்மானம்
இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து திமுக போராட்டம் நடத்தியதுடன், சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications