For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆம் ஆத்மி எபெக்ட்: லஞ்ச் டைம்க்கு அதிக நேரம் எடுக்கும் ஊழியர்கள் சஸ்பெண்ட்- அகிலேஷ் யாதவ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Will suspend officials taking long lunch break: Akhilesh Yadav
லக்னோ: அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் இருக்கையில் இல்லாதிருந்தாலோ, மதிய உணவு இடைவெளிக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டாலோ இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான சிவபால் யாதவ், மதிய உணவுக்காக அரசு ஊழியர்கள் யாரும் தங்களது இல்லங்களுக்கு செல்லக்கூடாது என சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணியிலிருக்கும்போது திடீரென காணாமல் போனாலோ, மதிய உணவு இடைவேளைக்காக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டாலோ பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அம்மாநில முல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

எந்த அரசு ஊழியராவது பணி நேரத்தில் தனது இருக்கையில் இல்லாதிருந்தால் எனக்கு தகவல் கொடுங்கள். நான் அவர்களை பணி இடை நீக்கம் செய்கிறேன் என அவர் கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் ஊடகத் துறையினரின் ஒத்துழைப்பையும் அகிலேஷ் யாதவ் கோரியுள்ளார்.

English summary
Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav today said his government would "suspend" officials if they were found absent during officer hours or taking long lunch break, and also sought help from the media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X