கேரள சுற்றுலாவை பிரமோட் செய்வாரா ஸ்டெபி கிராப்?
திருவனந்தபுரம்: கேரள சுற்றுலாத்துறையின் பிராண்ட் அம்பாசடராக முன்னாள் டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ஸ்டெபி கிராப் நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
கேரள சுற்றுலாத்துறை இதுதொடர்பாக ஸ்டெபி கிராபை அணுகியுள்ளதாம். இதேபோல ஷாருக் கான் போன்ற மேலும் சில பிரபலங்களையும் இதற்காக அணுகியுள்ளனராம்.

ஸ்டெபி கிராப் பிராண்ட் அம்பாசடராக செயல்பட முன்வந்தால் ஆயுர்வதே மருத்துவத்தை உலக அளவில் மேலும் பிரபலமாக்க முடியும் என கேரள அரசு நம்புகிறதாம்.
22 முரை கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற டென்னிஸ் சாதனையாளர் ஸ்டெபி கிராப். இவருக்கு இன்றளவும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். காரணம், அப்படி ஒரு அருமையான வீராங்கனை இவர்.
ஸ்டெபி கிராப் தவிர ஷாருக்கான் போன்ற பிரபலங்களையும் அணுகியுள்ளதாம் கேரள சுற்றுலாத்துறை.
ஸ்டெபி கிராப் மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் ஆவார். 377 வாரங்கள் தொடர்ந்து அவர் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications