• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

உங்க மனநிலை தான் மாறனும்.. இனி ராணுவத்தையும் பெண்கள் வழி நடத்துவார்கள் .. உச்ச நீதிமன்றம் அதிரடி

|
  women officers in the Indian Army will be allowed 'command appointments

  டெல்லி: இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  இனி அனுமதிக்கப்பட்டுள்ளதால், ராணுவத்தில் உள்ள பெண்களுக்கு அவர்களின் ஆண் தோழர்களைப் போலவே அதேபோன்ற வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். எனினும் போரில் பெண்கள் போராட அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

  ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர்.

  மனதளவில் தயாரில்லை

  மனதளவில் தயாரில்லை

  இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்,. குடும்பப் பராமரிப்பில் பெண்களின் பங்கு மிகவும் பெரியது. ராணுவத்தில் அவர்களுக்கு ஆபத்து அதிகமாகவே உள்ளது. கிராமப்புற பின்னணியில் இருந்தே பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சேர்கிறாரக்ள். தற்போதைய சமூக நடைமுறைக்கு ஏற்றறவாறு, பெண்களை தளபதிகளாக ஏற்றுக் கொள்ள மனதளவில் இன்னும் தயாராகவில்லை என்று கூறியது.

  அபிநந்தன்

  அபிநந்தன்

  அதற்கு மனுதாரர்கள் , பெண்களின் உடல் திறன்கள், தரவரிசை மற்றும் கோப்பின் அமைப்பு மற்றும் உளவியல் யதார்த்தங்கள் குறித்து மத்திய அரசு முன்வைத்த வாதங்களை நிராகரிக்கப்பட வேண்டும்" என்று கூறி இதை எதிர்த்துள்ளனர். மனுதாரர்களான வழக்கறிஞர்கள் மீனாட்சி, ஐஸ்வர்யா தரப்பினர் வாதிடுகையில், கடுமையான சூழ்நிலையில் பெண்கள் பலர் விதி விலக்காக இருந்துள்ளார்கள். விமானக் கட்டுப்பாட்டளராக விங் கமாண்டர் அபிநந்தன் இருந்த போது பாகிஸ்தானால் சுடப்பட்டார். அப்போது அவரை வழிநடத்தியது பெண் அதிகாரி மிண் அகர்வால். அதற்காக அவருக்கு யுத் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

  ஆப்கன் தாக்குதல்

  ஆப்கன் தாக்குதல்

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தில் தீவிரவாதிகள் மீது துணிச்சலாக தாக்குல் நடத்தியவர் மித்தாலி மதுமிதா.. எனவே இப்படி ஆபத்தான காலங்களில் நாட்டிற்காக பெண்கள் போராடிய நிலையில், உயர் பதவிகளில் மட்டும் அவர்கள் இருக்க கூடாதா என்று வாதிட்டனர்.

  பிரசவ கால விடுப்பு

  பிரசவ கால விடுப்பு

  இதற்கு மத்திய அரசு தொடர் இடமாற்றங்கள், பெண்களுக்கு பாராமாக இருக்கும். கணவர்களின் தொழிலை பாதிக்கும்.. பிரசவ கால விடுமுறைஅளிக்கப்படுவதும் பெண்களுக்கு உயர் பதவிக்கு வருவதற்கு சவாலாக இருக்கும் . போர் சூழலில் எதிரிகள் பெண்களை கடத்தி செல்ல வாய்ப்பு உள்ளது வாதிட்டது.

  மக்கள் மனநிலையில்

  மக்கள் மனநிலையில்

  இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறுகையில், தேசிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறன் போன்ற கொள்கைகளை உருவாக்கும் போது அனைத்து அம்சங்களை கருத்தில் கொள்ளப்படும். பெண்களை உயர் அதிகாரிகளாக அனுமதிப்பது கடினம் என அரசு தரப்பு கூறுகிறது. காலங்கள் மாறிவரும் சூழலில் ஆண்களின் மனநிலையில் மாற்றம் தேவை. ராணுவத்தில் சேவை செய்ய பெண்களுக்கு வாய்ப்புஅளிக்க வேண்டும். பாலின பாகுபாட்டை களைய அரசு ,இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும். மற்றொன்று மக்களின் மனநிலை மாற வேண்டும் என்று கூறி தீர்ப்பை ஒத்திவைத்தது.

   உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

  இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதன்படி பெண்கள் குறித்த உங்களின் மன நிலை தான் மாற வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், பெண்களின் உடலியல் அம்சங்களுக்கு அவர்களின் உரிமைகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் பெண்களை ராணுவத்தின் உயர் பதவியில் நியமிக்கலாம் என்றும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பெண்களை ராணுவ அதிகாரிகளாக நியமிப்பதற்கு ஏதுவாக 3 மாதத்தில் நிரந்தர கமிஷன் அமைக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  பிரதமர் மோடி உறுதி

  பிரதமர் மோடி உறுதி

  பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் 2018 ஆகஸ்டில் இந்தியாவின் ஆயுதப்படைகளில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு குறுகிய சேவை ஆணையம் மூலம் நிரந்தர ஆணையத்தை எடுக்க விருப்பம் இருப்பதாக கூறியிருந்தார். குறுகிய சேவை ஆணையத்தின்படி, ஒரு பெண் அதிகாரி 10-14 ஆண்டுகள் பணியாற்ற முடியும். ராணுவ சேவை கார்ப்ஸ், ஆர்ட்னன்ஸ், எஜுகேஷன் கார்ப்ஸ், நீதிபதி அட்வகேட் ஜெனரல், பொறியாளர்கள், சிக்னல்கள், உளவுத்துறை மற்றும் மின் மற்றும் இயந்திர பொறியியல் கிளைகளில் பெண்கள் அதிகாரிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

  ஆயுத படை பிரிவு

  ஆயுத படை பிரிவு

  ஆனால் சோல்ஜர், இயந்திரங்களை கையாளும் வீரர்கள், விமானப் போக்குவரத்து மற்றும் பீரங்கிகள் போன்ற போர் கருவிகளை பயன்படுத்தும் படைகளில் பெண்களை அனுமதிக்க இப்போது அனுமதி இல்லை. இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை பெண்கள் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷனை வழங்குகின்றன.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  The Supreme Court To Decide Today, women officers in the Indian Army will be allowed "command appointments" on par with male officers?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more