For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பப்ஜி பார்ட்னர் போதுங்க... புருஷன் வேண்டாங்க - விவாகரத்து கேட்ட அகமதாபாத் பொண்ணு

கணவன் அடித்து துன்புறுத்தினாலோ, வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினாலோ விவாகரத்து கேட்ட காலம் போய், மொபைல் போனில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான பெண் ஒருவர் விவாகரத்து விண்ணப்பித்துள்ளது விசித்திரமானதாக உள்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குடும்ப நல நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி எத்தனையோ வித்தியாசமான விவாகரத்து வழக்குகளை பார்த்திருப்பார். கவுன்சிலிங் கொடுத்து தீர்த்திருப்பார். சமீபகாலமாக ஃபேஸ்புக் அடிமைகள், வாட்ஸ் அப் அடிமைகள், டிக் டாக் அடிமைகள் அதிகமாக குடும்ப வாழ்க்கை கும்மியடிக்கத் தொடங்கியுள்ளது. சமீபகாலமாக பப்ஜி விளையாட்டு மோகத்தில் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு பெண் தனது பப்ஜி கேம் பார்ட்னருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறி கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று தரக்கோரி தொண்டு நிறுவனத்தை அணுகியுள்ளார்.

கூட்டுக்குடும்பங்கள் அரிதாகி வரும் இன்றைய நிலையில் மொபைல் போன்கள் ஸ்மார்ட் போன்களாக மாறிய பின்னர் கணவன் மனைவி உறவுகளே காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. எதையும் அளவாக பயன்படுத்தினால் மருந்து. அதுவே அளவுக்கு மீறினால் அது விஷமாகிவிடும். விளையாட்டு வினையாகும் என்பார்கள் பப்ஜி கேம் பலரது வாழ்க்கையில் வினையாகி கத்திக்குத்து வரை போயுள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த ப்ளூஹோல் நிறுவனத்தின் தயாரிப்பான பப்ஜி கேம் ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து 20 கோடி முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் மல்ட்டி பிளேயர்கள் இணைந்து விளையாடும் இந்த ஆன்லைன் விளையாட்டு பலரையும் ஈர்த்துள்ளது. ஆக்சன், சாகச திரில் என போர் அடிக்காமல் போவதால் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரிலும் அதிக அளவில் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

என்னோட ராசி நல்ல ராசின்னு நாளைக்கு பாடப்போறவங்க யார்- லோக்சபா தேர்தல் ரிசல்ட் 2019

உடல் நல பாதிப்பு

உடல் நல பாதிப்பு

மொபைல்போனை கையில் பிடித்துக்கொண்டு உண்ணாமல் உறங்காமல் விளையாடுபவர்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. கண் பிரச்சினை நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படும் என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கை. அதையும் மீறி பப்ஜி பிரியர்களாக மாறி வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக படிப்பில் கோட்டை விட்டுள்ளனர். இதனால் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தவே, வேலூர் பல்கலைக்கழகத்தில் தடை விதிக்கப்பட்டது.

தடை விதிக்கப்பட்ட விளையாட்டு

தடை விதிக்கப்பட்ட விளையாட்டு

குஜராத் மாநிலத்தில் பல மாவட்டங்களில் இந்த விளையாட்டிற்கு தடை உள்ளது தடையை மீறி விளையாடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பப்ஜி ஆடிக்கொண்டே படிக்காமல் விட்ட மாணவர் தேர்வில் பப்ஜி விளையாட்டு பற்றி பதில் எழுதி திருத்துபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். சீனாவில் 13 வயதிற்கு உட்பட்டோர் இந்த கேம் விளையாட தடை உள்ளது. அதே போல நம் நாட்டிலும் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குடும்பத்தில் பாதிப்பு

குடும்பத்தில் பாதிப்பு

ஃபேஸ்புக்கில் சாட் செய்து நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள், வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்து நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். பப்ஜி கேம் விளையாடிய திருமணமான பெண் ஒருவர் தனது பப்ஜி பார்ட்னருடன் நெருக்கமாகி திருமணமான தனது கணவரையும், குழந்தையையும் மறந்து விட்டார். விளைவு விவாகரத்து கேட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.

பப்ஜி பார்ட்டனர்

பப்ஜி பார்ட்டனர்

அகமதாபாத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கட்டிட காண்ட்ராக்டருடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது

இந்த பெண் பப்ஜி கேம் விளையாட்டில் ஆர்வம் காட்டினார். பக்கத்து தெரு பையன் ஒருவன் இந்த பெண்ணுடன் பார்ட்னராக சேர்ந்து விளையாடினான். இதில் இருவருக்கும் நட்பாகி பின்னர் காதலானது.

ஹெல்ப்லைனுக்கு போன்

ஹெல்ப்லைனுக்கு போன்

சில தினங்களுக்கு முன் 181 அபயம் பெண்கள் ஹெல்ப்லைனுக்கு போன் செய்த அந்த பெண், தனது கணவருடன் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் விவகாரத்து வாங்கிக் கொடுத்தால் தனது பப்ஜி பார்ட்னருடன் சேர்ந்து வாழ்வேன் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்து மனதை மாற்றியுள்ளனர். இதுபோல் ஹெல்ப்லைனுக்கு ஏற்கனவே ஒரு போன் வந்திருக்கிறதாம். தற்போது ஐடி நம்பரை வைத்து பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திலும் இதே கேஸ்

ஐக்கிய அரபு அமீரகத்திலும் இதே கேஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மான் நகரில், 20 வயதான பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது கணவர் பப்ஜி விளையாடுவதற்கு அனுமதி மறுப்பதால் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். எனக்கான பொழுது போக்கை தீர்மானிக்க எனக்கு உரிமை இல்லையா என்றும் கேட்டிருக்கிறார். நான் யாருடனுடம் சேட்டிங் செய்வதில்லை, உறவினர்கள், நண்பர்களுடன்தான் விளையாடுகிறேன் என்றும் கூறி அதிர வைத்துள்ளார் அந்த பெண். உலகம் போற போக்கே சரியில்லையே. இந்த பப்ஜி இன்னும் எத்தனை பேர் வாழ்க்கையை பப்படம் ஆக்கப் போகுதோ தெரியலையே.

English summary
A 19-year-old Ahmedabad woman married with a one year old baby, wants to divorce her husband not because of a domestic feud or discord, but because of her addiction to PUBG.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X