For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைஃபை ஸ்விட்சை ஆஃப் செய்ததால் பிரச்சனை.. மனைவியை மோசமாக தாக்கிய கணவன்.. ஹைதராபாத்தில் கொடூரம்

வைஃபை மூலம் சிக்னல் பகிர்வதை நிறுத்தியதால் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவன் மிகவும் மோசமாக தாக்கி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வைபை சேவை நிறுத்தியதால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்- வீடியோ

    ஹைதராபாத்: வைஃபை மூலம் சிக்னல் பகிர்வதை நிறுத்தியதால் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவன் மிகவும் மோசமாக தாக்கி இருக்கிறார்.

    ஹைதராபாத்தின் சோமாஜிகுடா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. ரேஷ்மா என்ற பெண்ணும், சுல்தான் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருக்கிறார்கள்.

    ஏற்கனவே இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு மூன்று வயதில் குழந்தை ஒன்றும் இருக்கிறது.

    காயம்

    காயம்

    சுல்தான் இரவில் நெட் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ரேஷ்மா வைஃபையை நிறுத்தி இருக்கிறார். அந்த கோபத்தில் ரேஷ்மாவை சுல்தான் மோசமாக தாக்கி இருக்கிறார். முகம், நெஞ்சு, கை என உடல் முழுக்க காயம் ஏற்பட்டு இருக்கிறது.

    அனுமதி

    அனுமதி

    இதையடுத்து ரேஷ்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் முதலில் மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்ததால் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    புகார்

    புகார்

    இதுகுறித்து அந்த பெண்ணின் குடும்பம் போலீசில் புகார் அளித்து இருக்கிறது. மனைவியை கொடுமைப்படுத்ததுதால் உள்ளிட்ட சில பிரிவுகளில் புகார் அளித்தனர். மேலும் கொலை செய்ய முயற்சி செய்தார் என்றும் புகார் அளித்து இருக்கிறார்கள்.

    புகாரை எடுக்கவில்லை

    புகாரை எடுக்கவில்லை

    ஆனால் இவரது புகாரை போலீஸ் நிலையம் பதிவு செய்யவில்லை. எப்ஐஆர் பதிவு செய்யும் முன் இதுகுறித்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். கணவனுக்கு மனநோய் இருக்கிறதா என்று மருத்துவமனையில் சோதனை செய்ய இருக்கிறார்கள்.

    English summary
    Woman named Reshma beaten up by husband Sultan for switching off WIFI in Hyderabad. The family of Reshma filed complaint on Sultan in this issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X