ட்ரம்மில் உடல் உறுப்புகள்.. அலறிய ஆந்திரா! 18 மாதங்களுக்கு பின் வெளிவந்த பெண் கொலை - யார் இந்த ரிஷி?
அமராவதி: ஆந்திராவில் பெண் ஒருவர் பல துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டு டிரம்முக்குள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், 18 மாதங்களுக்கு பின் அந்த கொலை சம்பவம் போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது.
விசாகப்பட்டினத்தை அடுத்து மதுரவடா பகுதியில் அமைந்து இருக்கிறது விகாலாங்குலா காலனி. இங்குள்ள ஒரு வீட்டின் பிளாஸ்டிக் டிரம்மில் பெண்ணின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் போலீசாரின் கவனத்துக்கு வந்திருக்கிறது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

பெண்ணின் உடல்
தடயவியல் துறையினர் உதவியுடன் நடைபெற்ற இந்த விசாரணையில் கொல்லப்பட்ட பெண் என்றும், 18 மாதங்களுக்கு முன்பாக, அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் அந்த பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தெரியவந்து இருக்கிறது. கொல்லப்பட்ட பெண் 4.5 முதல் 4.8 அடி உயரம் கொண்டவர் எனவும் கண்டறிந்து இருக்கிறார்கள்.

யார் இந்த ரிஷி?
அவரை யாரோ கொடூரமாக கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு அடைத்து டேப் கொண்டு இருக்கமாக ஒட்டி இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளார்கள். பெண்ணை கொலை செய்தது யார் என்பது பற்றி தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் 32 வயதான ரிஷி என்ற நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து உள்ளார்கள்.

வெல்டிங் தொழிலாளி
கைது செய்யப்பட்ட ரிஷி மதுரவாடா பகுதியில் வெல்டிங் கடையை நடத்தி வருகிறார். இவர் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடினர் வசிக்கும் கிராமமான சீதாம்பேட்டா பகுதியை சேர்ந்தவர். பெண்ணின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்ட 12 மணி நேரத்திற்குள் ரிஷியை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து உள்ளார்கள்.

வாடகை வீடு
ரிஷி வேலை செய்து வந்த வெல்டிங் கடையின் உரிமையாளரான ரமேஷுக்கு விகாலாங்குலா காலனியில் வீடு சொந்தமாக வீடு உள்ளது. அதில் ரிஷி தனது மனைவி மற்றும் மகளுடன் வாடைக்கு வசித்து வந்து உள்ளார். கொல்லப்பட்ட பெண் பாலியல் தொழிலாளர் என்பதும், அவரை ஆட்டோவில் தனது வீட்டுக்கு ரிஷி அழைத்து சென்றதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

கொலைக்கான காரணம்
தனது மனைவியின் மகப்பேறுக்காக ஸ்ரீகாகுளத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்ற நேரத்தில் பெண்ணை ரிஷி வீட்டுக்கு அழைத்து சென்றதாக கூறிய போலீசார், அதிக பணம் கேட்டதால் கோபத்தில் அவரை கொலை செய்துவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள். அதன் பிறகே உடலை பல துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து மறைத்ததாக கூறி உள்ளனர்.

ஊரைவிட்டு சென்ற ரிஷி
பெண்ணை கொலை செய்துவிட்டு, தனது மனைவியை கவனித்துக் கொள்வதாக உரிமையாளரிடம் கூறிவிட்டு அந்த ஊரிலிருந்து கிளம்பி சொந்த ஊருக்கு ரிஷி சென்றது விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதன் பிறகு மதுரவாடா பகுதிக்கே செல்லாமல் சொந்த ஊரிலேயே ரிஷி தங்கி இருந்திருக்கிறார்.

ஷாக் ஆன ரமேஷ்
வீட்டு வாடகை கேட்டு ரிஷியை பலமுறை உரிமையாளர் தொடர்புகொண்டும் அவர் போனை எடுக்காததால், வீட்டை வேறொருவருக்கு வழங்க முடிவெடுத்த ரமேஷ், உள்ளே சென்று அறைகலன்களை அகற்ற முயன்றபோது பிளாஸ்டிக் டிரம் இருந்ததை கண்டுள்ளார். அதற்குள் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், போலீசாரிடம் புகாரளித்து உள்ளார்.

யார் அந்த பெண்?
பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்து இருக்கும் போலீசார், வடக்கு ஆந்திராவில் காணாமல்போனதாக காவல்நிலையங்களில் பதிவான புகார்களை வைத்து கொல்லப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அதே நேரம் அந்த பெண் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என கைதான ரிஷி தெரிவித்து உள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications