For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களே.. கேரள முதல்வரின் இந்த கோரிக்கையை கேளுங்கள்!

உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரள அரசுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரள அரசுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 பேர் வரை பலியாகியுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்துள்ளன.

மறு சீரமைப்பு பணிகள்

மறு சீரமைப்பு பணிகள்

தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்களில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.

திரும்பும் மக்கள்

திரும்பும் மக்கள்

கேரளாவில் மழை குறைந்து, வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

சுத்தம் செய்யப்படும் வீடுகள்

சுத்தம் செய்யப்படும் வீடுகள்

இன்னும் 1,465 நிவாரண முகாம்களில் 4.62 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சுத்தம் செய்து தரப்பட்டுள்ளன.

ரூ. 20,000 கோடி கணக்கீடு

ரூ. 20,000 கோடி கணக்கீடு

வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளையும், பாலங்கள், சாலைகள் கட்டமைப்பு வசதிகளை மீண்டும் மேம்படுத்தித் தர ஏராளமான நிதி தேவைப்படுகிறது. மறு சீரமைப்பு செய்ய 20, 000 கோடி ரூபாய் செலவாகும் என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

ஒரு மாத சம்பளம்

ஒரு மாத சம்பளம்

இந்நிலையில் மாநிலத்தின் மறுக்கட்டமைப்பு பணிக்காக கேரளாவில் வாழும் மக்களும், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக்காக நிவாரணமாக அளிக்க வேண்டும் என பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 10 மாதங்களுக்கு

10 மாதங்களுக்கு

ஒரு மாத சம்பளத்தை கொடுக்க முடியாதவர்கள் மாதம் தோறும் 3 நாள் சம்பளம் என 10 மாதங்களுக்கு நிவாரண தொகையை வழங்கலாம் என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Kerala Chief Minister Pinarayi Vijayan demanding worldwide Malayalis to Donate month's salary for Kerala relief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X