For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்த யாசின் மாலிக் கைது!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்த ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு 5 கட்டமாக நவம்பர் 25-ந் தேதி முதல் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு காஷ்மீர் விடுதலை அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

Yasin Malik arrested in Srinagar

இந்த நிலையில் இன்று காலை ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சையத் அலி கிலானியும் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் கே. ராஜேந்திர குமார், தேர்தல் அமைதியாக நடத்தப்பட வேண்டும்; தேர்தலை சீர்குலைக்கும் எந்த ஒரு சக்தியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்திருந்தார்.

English summary
Separatist leader Muhammad Yasin Malik, who has called for a boycott of the coming Jammu and Kashmir elections, was Thursday taken into preventive custody here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X