For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.யில் தடையை மீறி பிரச்சாரம் செய்த சர்ச்சை எம்.பி, ஆதித்யநாத் மீது வழக்குப்பதிவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் வருகிற சனிக்கிழமை, 9 சட்ட சபை தொகுதிகளுக்கும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி லக்னோவில் பாஜகவின் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் யோகி ஆதித்யானாந்த் கலந்து கொள்ள உ.பி அரசு தடை விதித்தது.

Yogi Adityanath defies orders, holds rally in Lucknow

ஆனால் தடையை மீறி யோகி ஆதித்யானாந்த் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டார். பேரணியில் பேசிய யோகி என்னை கைது செய்யுங்கள், உங்களால் அது முடியுமா என அகிலேஷ் யாதவ் அரசுக்கு சவால் விட்டு பேசினார். தடையை மீறி பேரணியில் கலந்து கொண்ட ஆதித்யானாந்த் மீது மாவட்ட நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்தது.

உத்தர பிரதேச அரசின் கொள்கைகள் பிரிவினை மற்றும் பாராபட்டமானது என ஆதித்யானாந்த் குற்றம்சாட்டி உள்ளார்.

ஆதித்யானாந்த் பேச்சு வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்,இந்த சிடிக்கள் தேர்தல் ஆணயத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். மேலும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் தாகுர்ட்வாரா, மைன்புரி மற்றும் நிக்கசன் ஆகிய கூட்டங்களில் பங்கேற்கவும் அவர் அனுமதிக்கப்படவில்லை,.இதை தொடர்ந்து ஆதித்தியானாத் மொபைல் போன் மூலம் உரையாடினார்.

English summary
Yogi Adityanath defies orders, holds rally in Lucknow and booked by local police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X